ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக முஸ்லிம் மஜ்லிஸின் கிரிக்கட் சுற்றுப்போட்டி » Sri Lanka Muslim

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக முஸ்லிம் மஜ்லிஸின் கிரிக்கட் சுற்றுப்போட்டி

Contributors

 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் அமைப்பினால் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்ப்பட்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி 31-05-2014 அன்று வெகுவிமர்சையாக பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்றது.

 

இச்சுற்றுப்போட்டியில் 7 அணிகள் பங்குபற்றியது இறுதிப் போட்டிக்கு தாஜ் லயன்ஸ் அணியினரும் மெல்போர்ன் செவன் ஸ்டார்ஸ் அணியினரும் தகுதி பெற்றனர்.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய மெல்போர்ன் செவன் ஸ்டார்ஸ் அணியினர் 5 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றனர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தாஜ் லயன்ஸ் அணியினர் 2.4 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தனர்.

 

தாஜ் லயன்ஸ் அணியின் சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய றிப்கான் 10 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 45 ஓட்டங்களை பெற்று அணியின்வெற்றியை உறுதிசெய்தார்.

 

இறுதிப் போட்டிக்கு அதிதிகளாக முஸ்லிம் மஜ்லிஸின் முன்னாள் தலைவர்களான Dr. சியாம் Dr.மின்பாஸ் கணக்காளர் Mr. A. ஜப்பார் Mr. M. றயீஸ் மற்றும் Mr. R. இலாஹி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின்; ஆட்டநாயகனாகவும் தாஜ் லயன்ஸ் அணியின் றிப்கான் தெரிவு செய்யப்பட்டார். இறுதியில் வெற்றிபெற்ற அணியினர் அதிதிகளினால் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

Slide2

 

Slide3

 

Slide4

 

 

Web Design by The Design Lanka