ஹஜ்ஜிக்குத்தான் போகிறார்களா? - Sri Lanka Muslim
Contributors
author image

முனையூர் ஏ. ஸமட்

பேச்சுப் பொருளாய் போன
நம்
ஐம்பெரும் கடமையான ஹஜ்
வருமானத்திற்கான வியாபாரமாகவும்
மாறிப் போனது
மரணத்தையும் மறுமையையும்
மறந்து வாழும்
நமது
சகோதரர்களுக்கு !

 

ஒரு முறைதான் கடமையென்று
 கட்டளையுள்ளபோதிலும் கூட
பலருக்கு பல முறை
ஹஜ்ஜிக்குச் செல்வது கடமையாகி விட்டது!
பணத்தைக் கொடுத்துச் சிலரும்
பணத்துக்காகவே பலரும்
மக்கமா செல்கிறார்கள் வருடம் தோரும் !

 

கண்ணீரில்
கொஞ்ச உறவுகள்
கவலைளில்
மிச்ச உறவுகள்
அவர்கள் பறக்கிறார்கள்
பல ஆண்டுகளாய்
மக்கமா நகர் நோக்கி…

 

திண்னையில்
தங்கச்சிமார்
பாயிழைத்து பாயிழைத்து
கை ரேகைகளைத் தொலைத்துவிட்டு
இழைத்த பாயினிலே
படுத்துக் கிடக்கிறார்கள்
பட்டினியோடு…..

 

ஓட்டைக் குடிசைகளுக்குள்
ஓற்றை விளக்கொளியில்
தம்பி மார்களும்
 தாரங்களும் பிள்ளைகளும் கூட
கவலையோடு கண்ணிமைக்க
காக்காமார்கள் ஹஜ்ஜுக்குப் போகிறார்கள்….

 

அன்னையர்களோ
அடுத்தவர் தயவில்
அன்னம் பெற்று
அன்றாட ஜீவியம் கடத்த
அன்பு மகன்மார்
அரபு மண்ணுக்குச் செல்கிறார்கள்….

 

தங்கையர்களின்
பசி – அவர்கள்
வயிற்றுக்குப் தெரியாது
தம்பிமார்களின்
வறுமை – அவர்கள்
வங்கிப் பணத்துக்குப் புரியாது
அன்னையர்களின்
அழுகை – அவர்கள்
அன்பு இல்லத்தரசிகளுக்கு விளங்காது…..
சொல்கிறார்கள் – ஊரார்
அவர்களுக்கு ஒன்றுமே
தெரியாதாம்
அவர்கள் போவது ஹஜ்ஜுக்கல்லவேயென்று….?

Web Design by Srilanka Muslims Web Team