ஹஜ்ஜுக்கு அழைத்து செல்லாமல் ஏமாற்றப்பட்டவர்களின் கவனத்திற்கு! » Sri Lanka Muslim

ஹஜ்ஜுக்கு அழைத்து செல்லாமல் ஏமாற்றப்பட்டவர்களின் கவனத்திற்கு!

mus

Contributors

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

இம்முறை ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக திணைக்களத்தில் 8120 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். ஆனாலும் ஹஜ் கோட்டா குறைக்கப்பட்டதனால் இலங்கையிலிருந்து ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்கு 2240 பேர்களுக்கே வாய்ப்புக் கிட்டியது.
இவர்கள் பதிவிலக்க அடிப்படையில் தெரிவு செய்யப்பட்;ட போதிலும்  ஹஜ் கமிட்டி நிர்ணயித்த 400,000 ரூபாவிற்கு மேலதிகமாக கட்டணம் அறவிட்டமையினால் 2240 வரையிலான பதிவிலக்கத்திற்கு உட்பட்ட அநேகமானவர்களுக்கு இவ்வருடம் ஹஜ் கடமையினை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. எனவே இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை பாதுகாப்பதற்காக பதிவிலக்க எண் உயர்த்தப்பட்டு 2240 ஹாஜிகள் ஹஜ்ஜுக்கு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு இலங்கை ஹாஜிகள் அனைவரும் மக்கா நோக்கி புரப்பட்டுவிட்டனர்.
இன்னிலையில் ஹஜ்ஜுக்கு செல்வதற்கு விண்ணப்பித்து ஹஜ் முகவர் நிலையங்களுக்கு பணம் செலுத்தி ஹஜ்ஜுக்கு அழைத்து  செல்லாமல் முகவர் நிலையங்களினால் ஏமாற்றப்பட்டவர்கள் இருப்பின் பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இல.180, டீ.பி.ஜாயா மாவத்த, கொழும்பு-10 என்ற முகவரிக்கு தங்களின் முறைப்பாடுகளை எழுத்து மூலமாக 2013.11.05 திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

Web Design by The Design Lanka