ஹஜ்ஜுப் பெருநாளை எவ்வாறு தீர்மானிப்பது? - Sri Lanka Muslim

ஹஜ்ஜுப் பெருநாளை எவ்வாறு தீர்மானிப்பது?

Contributors
author image

முனாப் நுபார்தீன்

கடந்த 06 ம் மாதம் தலைப் பிறையும் நமது நிலைப்பாடும் எனும் தலைப்பில் ஒரு ஆய்வினை இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றி இருந்தோம். இது ரமழானுடையத் தலைப் பிறையினை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த போதிலும் அது ரமழானுக்கு மாத்திரம் உரியதல்ல மாறாக இஸ்லாமிய மாதங்கள் 12 ற்கும் பொதுவானதே என்பதனை முதலில் வாசகர்களுக்கு ஞாபகமூட்டிக் கொள்கின்றோம்.

 

புனித ஹஜ் கடமை என்பது நோன்பைப் போன்று காலத்துடன் மாத்திரம் சம்பந்தப்பட்ட ஒரு கடமைக் கிடையாது அது காலத்துடனும் நேரத்துடனும் இன்னும் குறிப்பிட்ட சில இடங்களுடனும் சம்பந்தப்பட்ட ஒரு கடமையாகும். என்றாலும் நம்மில் அநேகர் இதனை நோன்பைப் போன்று காலத்துடன் அதாவது பிறையுடன் மாத்திரமே சம்பந்தப்படுத்திப் பார்ப்பதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.இந்த அவர்களின் பார்வை முற்றிலும் தவறானது என்றே தோன்றுகிறது.

 

ஆகவே இது தொடர்பாக எமது பார்வை என்னவென்பதனை வாசகர்களின் கவனத்திற்குத் தருகின்றோம். என்றாலும் இது எமது ஆய்வே தவிர முடிவு கிடையாது என்பதனையும் வாசகர்களுக்கு அறிவித்துக் கொள்கின்றோம்.
புனித ஹஜ்ஜுக் கடமை காலத்துடனும் நேரத்துடனும் இன்னும் குறிப்பிட்ட சில இடங்களுடனும் சம்பந்தப்பட்ட ஒன்றாகும் என்று கூறியிருந்தோம் எனவே அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 

1. காலம் (துல்-ஹஜ்)

ஹஜ் கடமையினைக் குறிப்பிட்ட சில காலங்களில் மாத்திரம்தான் நிறைவேற்ற முடியும்

 

அல்லாஹ் கூறுகின்றான் :

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவேää அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால்ää ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம்ää கெட்ட வார்த்தைகள் பேசுதல்ää சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது)ää தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்-குர்ஆன் : 2:197)

 

பிறையின் நோக்கமும் அதன் தொழிற்பாடும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

(நபியே! தேய்ந்துää வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; ”அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும்ää ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லைää ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்;. நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வைää அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்-குர்ஆன் : 2:189)
மேற்படி வசனம் பிறையின் தொழிற்பாடு மற்றும் அது படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்னவென்பதனைச் சுட்டிக் காட்டுகின்றது.அதாவது அது பின்வரும் இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது.

 

1. பொதுவாக மக்களுக்குக் காலங்களைக் காட்டுகின்றது.
2. குறிப்பாக ஹஜ்ஜுடைய காலத்தை அறிவிக்கின்றது.

2. இடம் (மக்கா)

 

எவ்வாறு புனித ஹஜ்ஜுக் கடமை குறிப்பிடப்பட்ட சில காலங்களில் நிறைவேற்றப்பட வேண்டுமோ அவ்வாறே அது குறிப்பிட்ட இடத்திலும் நிகழுதல் கட்டாயமாகும்.

 

அல்லாஹ் கூறுகின்றான் :

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும்ää உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாகää இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;. இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால்ää எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) – நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கி;றான். (அல்-குர்ஆன் : 3:96-97)

 

3. நேரம் (அரபா தினம்)

எவ்வாறு இது குறிப்பிடப்பட்ட சில காலங்களில் குpறிப்பிட்ட இடத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமோ அவ்வாறே அது குறிப்பிட்ட நேரத்திலும் நிகழ்தல் அவசியமாகும். அதாவது ஹஜ் உடைய கடமைகள் துவங்பப்படும்; நேரம் துல் ஹஜ் மாதம் பிறை ஒன்பதாம் நாளன்று சூரியன் உதித்ததற்குப் பின் ஆரம்பமாகும்.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஹஜ் என்பது அரபாவாகும் . (நூல் : அபூ தாவுத்)

பிரிதோர் அறிவிப்பில் ஹஜ் என்பது அரபாவாகும் யார் ஜம்உ (அரபாதினம்) இரவில் பஜ்ர் உதயமாவதற்கு முன் (அரபாவிற்கு) வருகின்றாரோ அவர் ஹஜ்ஜை அடைந்து கொண்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (நூல் : ஹாக்கிம்)

 

மேற்படி மூன்று அடிப்படைகளையும் வைத்தே ஹஜ்ஜையும் ஹஜ்ஜுப் பெருநாளையும் நிர்ணயம் செய்தல் வேண்டும். இதற்கு மாற்றமாக இந்த மூன்று அடிப்படைகளில் ஒன்று புறக்கணிக்கப்பட்டாலும் அந்தக் கடமையைச் செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

 

உதாரணமாக : இலங்கையில் இவ்வருடம் 06-10-2014 ம் திகதி திங்கட்கிழமை ஹஜ் பெருநாள் என அகில இலங்கை உலமா சபைத் அறிவித்துள்ளது. இந்நிலையில் புனித ஹஜ்ஜுக் கடமையினை நிறைவேற்ற விரும்பும் இலங்கைப் பிறஜை ஒருவர் ஹஜ்{டைய கிரியைகள் துல்-ஹஜ் மாதம் 09 ம் நாளிலிருந்தே ஆரம்பமாவதால் இலங்கையிலிருந்து அரபாவுடைய நாளன்று அரபவுக்குச் சென்றால் போதும் என்று நினைக்கின்றார்.

 

எனவே அவருக்கு அகில இலங்கை உலமா சபையின் அறிவிப்பின் படி இவ்வருடம் துல்-ஹஜ் மாதத்தின் 09 ம் நாள் 10ம் மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக் கிழமையாகும் எனவே அவர் அன்றய தினம் காலையில் புறப்படுகின்றார்  என்று வைத்துக் கொள்வோம் அப்படி என்றால் அவர் 10ம் மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அரபாவை வந்தடையும்; போது மக்காவிலுள்ள ஹாஜிகள் அனைவரும் அங்கு அரபா தினமாகிய துல்-ஹஜ் 09 நாளாகிய (03-10-2014) வெள்ளிக் கிழமையையும் பெருநாள் தினமாகிய துல்-ஹஜ் 10 ம் நாள்; (04-10-2014) சனிக்கிழமையையும் கடந்து அய்யாமுத் தஷ்ரீக்குடை முதலாம் நாளாகிய பிறை 11 ம் நாள் ஞாயிற்றுக் கிழமை மினாவில் இருப்பார்கள்.

 

இப்போது மேற்படி இலங்கைப் பிரஜையின் நிலை என்ன? அவர் தனியாக ஹஜ் செய்வாரா? மக்காவில் ஹாஜிகள் அனைவரும் மினாவில் தங்கி இருக்கும் அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்க்களில் அவ்வாறு செய்வது சாத்தியமா? என்று கேட்டால் நிச்சயமாக அனைவருடைய பதிலும் முடியாது என்பதாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

 

அப்படி என்றால் ஹாஜிகள் அரபாவையும் முடித்து பெருநாளையும் முடித்து விட்டு அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாளில் இருக்கும் போது நாம் பெருநாள் கொண்டாடுவது மட்டும் சரியானதாகுமா? இது தவறு கிடையாதா?

 

தொழிநுற்ப்பத்தில் முன்னேற்றம் அடையாத தொலைத் தொடர்பு சாதனங்களோ வசதிகளோ அற்ற முன்னயக்காலங்களில் போலன்றி இன்று உலகில் எங்கு என்ன நடந்தாலும் அவற்றை அனைத்துலக மக்களும் உடனுக்குடன் பகிர்ந்து தெரிந்து கொள்ளும் அளவுக்கு வல்ல அல்லாஹ் மனிதனது ஆற்றலில் விருத்தியைக் கொடுத்துள்ளான்.

 

எனவே காலம் நேரம் இடம் ஆகிய மூன்று அடிப்படைகளை வைத்துத் தீர்மானிக்கப்பட வேண்டிய ஹஜ்ஜுப் பெருநாளை பிறையை மாத்திரம் வைத்துத் தீர்மானிப்பது எவ்வளவு தூரம் சரியானத் தீர்மானமாக இருக்க முடியும் என்பதனை சிந்தித்துப் பாருங்கள்.

 

எனவே எப்பொழுது ஹாஜிகள் மக்கா அரபாவில் ஒன்று கூடுகின்றார்களோ அதற்கு அடுத்த நாள்தான் முழு உலகுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் என்பதுவே சரியான தீர்மானமாக இருக்க முடியும். இதுவே மேற்படி காலம் இடம் நேரம் ஆகிய மூன்று அடிப்படைகளும் ஒருங்கே அமையப் பெற்ற அறிவுபூர்வமான முடிவாக இருக்கும் எனக்கருதுகின்றோம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

Web Design by Srilanka Muslims Web Team