ஹஜ் கோட்டா விவகாரம் ; உண்மை என்ன? - Sri Lanka Muslim
Contributors
author image

Press Release

முகமட் பாயிஸ்
கொழும்பு -14
02.09.2014

 

ஊடக அறிக்கை

 

இந்தியாவில் உள்ள அமைச்சர் கிருஸ்னா சவுதிக்குச் சென்று சவுதி ஹஜ் அமைச்சரைச் சந்தித்து இந்தியாவுக்கு 26ஆயிரத்திற்கும்  மேற்ப்பட் ஹஜ் கோட்டாவை பெற்றுக் கொடுத்துள்ளார். பாபுதி பள்ளியை உடைத்த இந்திய அமைச்சருக்கு இருக்கு ஊக்கம் ஏன் எமது சிரேஸ்ட அமைச்சர் பௌசிக்கு இல்லாமல் போகிவிட்டது. இலங்கையின் சனத்தொகைக்கேட்ப சுருக்கிக் கொடுத்த கோட்டாவை 2240 தனது ஆதரவாளர்களுக்கும் மற்றும் அதனை ஜித்தாவுக்குச் சென்று களவாக கணனியில் புகுத்தவே செயல்பட்டார் ஒலிய இலங்கைக்கான கோட்டாவை அதிகரித்துக் கேட்போம் என்று அவர் நினைக்கவில்லை.

 

இம்முறை இலங்கை முஸ்லீம்களுக்கு 2240 ஹஜ் கோட்டாக்களை சவுதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. நாடறிந்த உண்மை. அதனை சரியாக முறையாக பிரிக்கப்படாமையால் சிரேஸ்ட அமைச்சர் பௌசிக்கு எதிராக ஜூலை 10ஆம் திகதி உச்ச நீதிமன்றம் போக நிர்பந்தம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் 70 முகவர்களின் சார்பாக சில முகவர்கள் உயர் நீதிமன்றம் சென்றனர்.

 

சிரேஸ்ட அமைச்சர் கோட்டா பகிர்வில் பகிரங்க அநீதி இழைத்ததால் அதை புத்த சாசன அமைச்சுக்கு நியாயமாக பகி;ர்ந்து கொடுக்க அனுமதி வழங்கியது. முடிவில் ஒவ்வொரு முகவரும் நேர்முகப்பரீட்சையில்  பெற்ற புள்ளிகளுக்கு அமைய நீதியாக நியாயமாக அவர்களுக்கு கோட்டா வழங்கப்பட்டது. அதற்கான அத்தாட்சி கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி அரச பத்திரிiயான சன்டே ஒப்சேவரிலும் வெளிவந்திருந்தது.

 

இவ்வளவு நடந்தும் தனக்கேட்பட்ட கேவளமும் இழிவும் மூடிமறைக்க தன்னுடைய சக்தியையும் ஆதிக்கத்தையும் பயன்படுத்தி அவசரமாக சவுதி சென்று தான் முஸ்லீம் சமய விவகார அமைச்சர் என்று கூறிக்கொண்டு அவர் மூலம் தயாரித்த பட்டியலை சவுதி ஹஜ் இனையத்தில் அநீதமாக புகுத்தினார்.

 

நடந்தது இதுதான்- திடிரென சென்ற ஆகஸ்ட் 20ஆம் திகதிகளில் அமைச்சர் பௌசி நமது நாட்டின் உயர் மட்ட அழுத்தங்களை பிரயோகித்து அணைத்து கோட்டா பகிர்வையும் ரத்து செய்து அமைச்சர் முலமாக சான்றிதல்கள்  உடனடியாக வழங்கி பகிரங்க அநீதத்தின் உச்ச கட்டத்தையும்  தாண்டி தான் அராஜகத்தை நிலைநாட்டினார். (வயது போன காலத்திலும் என்ன தைரியம்)

 

இந்த நாட்டில் அதி உயர் நீதிமன்ற தீர்ப்பைக் கூட எவராலும் மீற முடியாததை நமது அநீதத்தின் சிரேஸ்டமானமவர் என பெயர் பெற்ற அமைச்சர் உலக சாதணையை நிலை நாட்டினார். ஷரீஆ அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி வழங்கப்பட்ட கோட்டாவை அநியாயமாக பிடுங்கி பறித்து மற்ற 20 முகவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. இப்படி கடந்த நான்கு வருடமாக நடைபெறும் திருவிளையாடல் ஒருவருடைய உரிமை பரிக்கப்பட்டால் அநீதம் இழைக்கப்பட்டால் வழங்கப்படும் தீர்ப்பு யாது ?

 

(1)    அநீதம் இழைக்கப்பட்டோரின் பத்துஆ எவ்விதனையும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும். (அது காபீராக இருப்பினும் சரியே)

 

(2)    உச்ச நீதிமன்றத்தால் புத்த சாசன அமைச்சின் செயலாளர் திசாநாயக்கக முலம் கோட்டா பிறிக்க உயர் நீதிமன்றம் அனுமதித்தது. இவர் வழங்கிய கோட்டாக்களையும்  ரத்துச் செய்து தான் முறைகேடாக தயாரித்த கோட்டாவை அனுமதிதிதன் முலம்.   இந்த  சிரேஸ்ட அனீதியாளர் என்றல்லவா அர்த்தம். இதை விட கேவளம் ஏதும் உண்டா ?

 

(3)    இப்படியான கேவளம் கெட்ட அமைச்சர் இனி ஒருபோதும் முஸ்லீம்கள் என்ற ஒரு சபைகளிலும் கலக்கக் கூடாது. அழைக்கவும் கூடாது.

 

(4)    எப்போதும் நான் முஸ்லீம்களுடைய வாக்கில் வரவில்லை சிங்கள சமுகத்தின் வாக்குகளால் தான் வந்தேன். என மார்புதட்டிக் கூறும் சிரேஷ;ட அமைசரை இனி பௌத்த மத விவகார அமைச்சுக்கு பொறுப்பாக நியமித்தால் புத்த காயாவுக்கு மக்களை அனுப்பவும் முடியும் அதில் கோட்டா ஏதும் கிடையாது. இது போன்ற பிரச்சினையும் வராது.

 

ஏல்லாவற்றையும் எதிர்வரும் பொதுத் தேர்தல்களில் அவருக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட முஸ்லீம்கள் முன்வர வேண்டும்.

 

(5)    இந்த வயோதிப நிலையில் இன்றோ மறுநாளோ கப்ருகுளிக்குத் செல்ல விருக்கும் அமைச்சர்  மற்றவருடைய ஹக்கில் விளையாடினால் என்னவாகும். என்பதை அவருடன் சம காலத்தில் இருந்தவர்கள் முலம் அவர் காணவில்லையா?

 

(6)    பாதிக்கப்பட்ட முகவர்களின் கோட்டாக்களை விழுங்கி ஏப்பமிடும் அநியாயாக் காரர்களே  உங்களின் குருப்பில் வரும் ஆலிம்களிடம் கேட்டுப்பாருங்கள் மேலதிகமாக கிடைத்த இந்த கோட்டாக்கள் ஹராம் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. இதில் வரும் வருமானம் மனைவி, பிள்ளைகளுக்கு திண்னக் கொடுததால் சிரேஸ்ட அமைச்சரின் தலைமையில் எங்கு செல்ல வேண்டி வரும் ?

 

(7)    உலமாக்களே – இந்த அநியாயாத்திற்கு ஒருபோதும் இணையாதீர்கள். இந்த கொள்ளை அடித்த கோட்டாக்கள் நியாயமாக ஹாலாலாக்க வழிகாட்டுங்கள்.  இது உங்கள் பொருப்பு.

 

(8)    ஒரு சில முகவர்கள் இந்த விரக்தியின் உச்சத்தில் தான்  எமது சமுக விரோதிகளிடம் போய் முறைப்பட்டிருகின்றார்கள் போலும். எப்படியிருந்தாலும் இந்த முகவர்கள் சமுகவீரோதிகளிடம் போயிருக்கக் கூடாது தவறுதான்

 

(9)    இந்தியாவில் உள்ள அமைச்சர் கிருஸ்னா சவுதிக்குச் சென்று சவுதி ஹஜ் அமைச்சரைச் சந்தித்து இந்தியாவுக்கு 26ஆயிரத்திற்கும்  மேற்ப்பட் ஹஜ் கோட்டாவை பெற்றுக் கொடுத்துள்ளார்.

 

பாபுதி பள்ளியை உடைத்த இந்திய அமைச்சருக்கு இருக்கு ஊக்கம் ஏன் அமைச்சர் பௌசிக்கு இல்லாமல் போகிவிட்டது. சுருக்கிக் கொடுத்த கோட்டாவை 2240 தனது ஆதரவாளர்களுக்கும் மற்றும் அதனை ஜித்தாவுக்குச் சென்று களவாக கணனியில் புகுத்தவே செயல்பட்டார் ஒலிய இலங்கைக்கான கோட்டாவை அதிகரித்துக் கேட்போம் என்று அவர் நினைக்கவில்லை.

 

முகமட் பாயிஸ்
கொழும்பு -14

Web Design by Srilanka Muslims Web Team