ஹஜ் பதிவுக்கான கட்டணம் செலுத்தும் இறுதி நாள் இன்று » Sri Lanka Muslim

ஹஜ் பதிவுக்கான கட்டணம் செலுத்தும் இறுதி நாள் இன்று

hajj1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

( ஐ. ஏ. காதிர் கான் )


   புனித ஹஜ்ஜுக்  கடமையை நிறைவேற்றுவதற்காக வருடாந்தம் அறவிடப்படுகின்ற மீளளிக்கும் தொகையைச்  இன்று 15 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தும் இறுதி தினம் இன்று (15) வியாழக்கிழமையாகும்.

   ஹஜ்ஜுக் கிரிகையைச்  செல்வதற்காக, முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்த சகல விண்ணப்பதாரிகளும், வருடாந்தம் அறவிடப்படுகின்ற மீளளிக்கப்படக்கூடிய 25 ஆயிரம் ரூபாவைச்  செலுத்தி, தங்களுக்கான பதிவை உறுதிப்படுத்தும் இறுதித் திகதி இன்று (15) வியாழக்கிழமையாகும் என,  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

   மேற்குறித்த தொகையை,  இலங்கை வங்கியின் –  2327593 எனும் கணக்கு இலக்கத்திற்கு வைப்புச் செய்து பற்றுச் சீட்டின் மூலப்பிரதியினை,  திணைக்களத்திற்கு நேரடியாகச்  சமர்ப்பித்து தமது பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு,  ஏற்கனவே திணைக்களத்தினால்  அறிவிக்கப்பட்டிருந்தது.

   எனினும், இவ்வாறு பதிவுகள்  உறுதி செய்யப்பட்ட போதிலும்,  இவ்வருடம் (2018) ஹஜ்ஜுப்  பயணத்திற்கான தகைமையாகக்  கருதப்படமாட்டாது என்பதையும்  விண்ணப்பதாரிகள் கவனத்திற் கொள்ள வேண்டுமென்றும்,  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ் – ஷேய்க் எம்.ஆர்.எம். மலிக், ஹஜ் பயணிகளை அறிவுறுத்தியுள்ளா

Web Design by The Design Lanka