ஹமீதிடம் அர‌சிய‌ல் காழ்ப்புண‌ர்வு ம‌ட்டும் கூடியுள்ள‌தையே காட்டுகிற‌து - உலமா கட்சி » Sri Lanka Muslim

ஹமீதிடம் அர‌சிய‌ல் காழ்ப்புண‌ர்வு ம‌ட்டும் கூடியுள்ள‌தையே காட்டுகிற‌து – உலமா கட்சி

ulama

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

க‌ல்முனையில் எந்த‌க்க‌ட்சியும் த‌னியாக‌ ஆட்சிய‌மைக்க‌ முடியாது என‌ கூறும் வை எல் எஸ் ஹ‌மீத் சாய்ந்த‌ம‌ருதிலும் சில‌ ஆச‌ன‌ங்க‌ளைப்பெறும் க‌ட்சிக்கு வாக்க‌ளிக்கும் ப‌டி க‌ல்முனை, ம‌ருத‌முனை ம‌க்க‌ளை கோரியுள்ள‌மை இவ‌ர‌து அர‌சிய‌ல் அறிவு ம‌ங்கி காழ்ப்புண‌ர்வு ம‌ட்டும் கூடியுள்ள‌தையே காட்டுகிற‌து.

க‌ல்முனையை காப்ப‌து என்ப‌து க‌ல்முனை முஸ்லிம்க‌ளின் க‌ட‌மை. ஆனால் அக்க‌ல்முனையை இத்த‌னை கால‌மும் இவ‌ர் சொல்லும் க‌ட்சியிட‌ம் க‌ல்முனை ம‌க்க‌ள் ஒட்டுமொத்த‌மாக‌ கொடுத்திருந்தும் க‌ல்முனையை இது வ‌ரை காப்பாற்றினார்க‌ளா?

இதோ வை எல் எஸ் போன்ற‌வ‌ர்க‌ளிட‌ம் நாம் முன் வைக்கும் கேள்விக‌ள்.

1.  94ம் ஆண்டு முத‌ல் க‌ல்முனையை ஆளும் முஸ்லிம் காங்கிர‌சால் க‌ட‌ற்க‌ரைப்ப‌ள்ளி வீதியின் பெய‌ரை காப்பாற்ற‌ முடிந்த‌தா?

2. க‌ல்முனை ந‌க‌ர‌த்தை த‌னி கிராம‌ சேவ‌க‌ர் பிரிவாக‌ மாற்றி அதில் வ‌ர்த்த‌க‌ உரிமையாள‌ர்க‌ளை ப‌திவு செய்ய‌ முடிந்த‌தா?
3. த‌மிழ் கூட்ட‌மைப்புட‌ன் முத‌ல‌மைச்ச‌ர் ப‌த‌விக்காக‌ மாகாண‌த்தில் கூத்த‌டித்தும் க‌ல்முனை புதிய‌ ந‌க‌ர‌த்தை உருவாக்கி க‌ல்முனையை காப்ப‌ற்ற‌ முடிந்த‌தா?
4. சுனாமியால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ருத‌முனை ம‌க்க‌ளின் வீட்டுப்பிர‌ச்சினையை தீர்க்க‌ முடிந்த‌தா?

5. சுனாமியால் நொறுங்கிப்போன‌ க‌ல்முனைக்குடியின் க‌ட‌ற்க‌ரையோர‌ப்ப‌குதிக‌ளில் உள்ள‌ இடிபாடுக‌ளுட‌னான‌ க‌ட்ட‌ட‌ங்க‌ளை அக‌ற்றி க‌ஞ்சா, போதை வ‌ஸ்த்துவுக்காக‌ அவை பாவிக்க‌ப்ப‌டுவ‌திலிருந்து க‌ல்முனை இள‌ம் வ‌ய‌தின‌ர் பாதுகாக்க‌ப்ப‌ட்ட‌ன‌ரா?

6.க‌ல்முனையின்  த‌னியார் ப‌ஸ் நிலைய‌த்தை பாதுகாக்க‌ முடியாம‌ல் அத‌னை கோடிக‌ளுக்கு விற்ற‌மை தெரியாதா?

7. ஒற்றுமையாய் வாழ்ந்த‌ க‌ல்முனை சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ள் ம‌த்தியில் பிர‌தேச‌ வாத‌த்தை க‌ட‌ந்த‌ 2011 தேர்த‌லில் ஏற்ப‌டுத்தி க‌ல்முனையை பாழ் ப‌டுத்திய‌து எந்த‌க்க‌ட்சி என்ப‌து தெரியாதா?
8. நாம் எழுதிக்கொடுப்ப‌தை வாசிப்ப‌வ‌ர்தான் பிர‌த‌ம‌ர் ர‌ணில் என‌ த‌ற்போது ஹ‌க்கீமால் கிண்ட‌ல‌டிக்க‌ப்ப‌டும் ஒரு சின்ன‌ப்பிள்ளை பிர‌த‌ம‌ரை கொண்டு வ‌ந்து எழுதிக்கொடுத்து பேச‌ வைத்து சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ளை ஏமாற்றிய‌து யார்?

9. க‌ல்முனையின் வ‌ள‌ங்க‌ள் அம்பாரைக்கு மாற்ற‌ப்ப‌டும் போது க‌ல்முனை ம‌க்க‌ள் முழு அதிகார‌ம் கொடுத்தும் அவ‌ற்றை பாதுகாக்க‌ முடியாம‌ல் காவு கொடுத்த‌து எந்த‌க்க‌ட்சி என்ப‌தை ம‌ன‌சாட்சியை திற‌ந்து சொல்ல‌ முடியுமா?

10. த‌மிழ் கூட்ட‌மைப்புட‌ன் இணைந்தும் க‌ல்முனையில் ஆட்சியை ஏற்ப‌டுத்துவோம் என‌ ஹ‌க்கீமே சொல்லும் போது நாளை அது ந‌ட‌ந்தால் எப்ப‌டி க‌ல்முனையை காப்பாற்ற‌ போகிறீர்க‌ள்?
11. எந்த‌ நிலையிலும் த‌மிழ் கூட்ட‌மைப்புட‌ன் இணைய‌ மாட்டோம் என்ற‌ உத்த‌ர‌வாத‌த்தை ஹ‌க்கீமிட‌மிருந்தும் ஹ‌ரீசிட‌மிருந்தும் பெற்றுக்காட்ட‌ முடியுமா?

12. சாய்ந்த‌ம‌ருதின் ஒரு வ‌ட்டார‌த்திலும் முஸ்லிம் காங்கிர‌ஸ் வெல்லாது என்ப‌தே உண்மையாகும். அந்த‌ள‌வுக்கு அம‌க்க‌ள் முட்டாள்க‌ள‌ல்ல‌. இந்நிலையில் க‌ல்முனை ம‌ருத‌முனை, ந‌ற்பிட்டிமுனை ம‌க்க‌ள் ஒற்றுமைப்ப‌ட்டு முஸ்லிம் காங்கிர‌சுக்கு வாக்க‌ளித்தாலும் அக்க‌ட்சியால் த‌னித்து ஆட்சிய‌மைக்க‌ முடியாது போகும். அந்நிலையில் வை எல் எஸ் சொல்வ‌து போன்று முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌மிழ் கூட்ட‌மைப்புட‌ன் இணைந்து க‌ல்முனையை விட்டுக்கொடுப்பார்க‌ள் என்ப‌தை ம‌றுக்க‌ முடியுமா?

இப்ப‌டி க‌ல்முனையை சின்னாபின்ன‌மாக்கி அத‌ன் வ‌ள‌ங்க‌ளை பாதுகாக்க‌ முடியாம‌ல் த‌ம‌து சொந்த‌ வ‌ள‌ங்க‌ளை ம‌ட்டும் வ‌ள‌ப்ப‌டுத்தும் முஸ்லிம் காங்கிர‌சை ந‌ம்பி மீண்டும் க‌ல்முனையை கொடுப்ப‌த‌ன் மூல‌ம் க‌ல்முனையை காப்பாற்ற‌ முடியாது.
அப்ப‌டியாயின் இத‌ற்கான‌ தீர்வு என்ன‌?
இதைத்தான் நாம் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ சொல்லி வ‌எஉகின்றோம். அதுதான் முஸ்லிம் க‌ட்சிக‌ளின் கூட்ட‌மைப்பு.

நாம் ந‌ம‌து இட‌த்துக்கு காவ‌லாக‌ நிறுத்திய‌வ‌ன் நம‌து வ‌ள‌ங்க‌ளை க‌ள‌வெடுத்துக்கொண்டிருந்தால் அவ‌னை தொட‌ர்ந்தும் காவ‌லாளியாக்குவ‌து புத்திசாலித்த‌ன‌மா அல்ல‌து அவ‌னை விர‌ட்டி விட்டு புதிய‌வ‌னை நிய‌மிப்பது புத்திசாலித்த‌ன‌மா என்ப‌து புத்திசாலியாக‌ காட்டும் வை எல் எஸ்ஸுக்கு புரியாதா?
அந்த‌ வ‌கையில் இன்று க‌ல்முனை ம‌க்க‌ளின் அமோக‌ வ‌ர‌வேற்பை பெற்றுள்ள‌ அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் த‌லைம‌யிலான‌ அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் என்ற‌ புதிய‌ காவ‌ல‌னின் த‌லைமையில் க‌ல்முனையை ஒப்ப‌டைப்போம். அக்க‌ட்சிக்கு த‌னியாக‌ ஆட்சிய‌மைக்க‌ முடியாது போனால் க‌ல்முனையை உண்மையிலேயே காப்பாற்றும் நோக்க‌ம் முஸ்லிம் காங்குர‌சுக்கு இருந்தால் ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் க‌ட்சியின் த‌லைமையில் முஸ்லிம் க‌ட்சிக‌ளின் கூட்ட‌மைப்பு ஆட்சி செய்ய‌க்கூடிய‌ வ‌கையில் முஸ்லிம் காங்கிர‌சும் இணைந்து செய‌ற்ப‌டும் அழுத்த‌த்தை ஏன் வை எல் எஸ் கொடுக்க‌ முடியாது. ?

ஆக‌வே அமைச்ச‌ர் ரிசாதுட‌னான‌ த‌னிப்ப‌ட்ட‌ மோத‌லுக்காக‌ க‌ல்முனையை மீண்டும் க‌ள்வ‌ர் க‌ட்சியிட‌ம் கொடுக்கும் துரோக‌த்தை செய்ய‌ வேண்டாம் என‌ வை.எல்.எஸ்ஸையும் க‌ல்முனைத்தொகுதி ம‌க்க‌ளையும் கேட்டுக்கொள்கிறோம்.
– முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி

Web Design by The Design Lanka