ஹரினுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு CID யில் முறைப்பாடு..! - Sri Lanka Muslim

ஹரினுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு CID யில் முறைப்பாடு..!

Contributors

ஹரின் பெர்னாண்டோ எம்.பிக்கு  எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிஐடியில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக தேசப்பற்று ஐக்கிய தேசிய கட்சி இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளது. எடுக்கும் குற்றத்தின் மூல காரணத்தை மறைக்க  எந்த முயற்சியும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சலுகைகளை பயன்படுத்தி அவர் வெளியில் இருப்பதாகவும் சட்டம் சகலருக்கும் நியாயமாக இருக்க வேண்டும் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசப்பற்று ஐக்கிய தேசிய கட்சி செயலாளர் சுகத் ஹெவபதிரண இந்த முறைப்பாட்டை நேற்று சி.ஐ.டியில் முன்வைத்தார்.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக ஹரின் பெர்னாண்டோ அழைக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் விசாணை நடத்துமாறு ஆளும் தரப்பு எம்.பிகள் சிலர் முன்னதாக சி.ஐ.டியில் முறையிட்டிருந்தனர்.  

இந்த நிலையிலே ரிசாத் பதியுதீன் எம்.பி  கடந்த மூன்று தினங்களுக்கு முன் கைதாகியிருந்தார். அடுத்து ஹரீன் பெர்ணாந்து கைது செய்யப்பட இருப்பதாக பரவலாக பேசப்படுவது தெரிந்ததே.

Web Design by Srilanka Muslims Web Team