ஹரிஸ் MP யின் வேண்டு கோளுக்கிணங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் கல்முனைக்கு விஜயம் - Sri Lanka Muslim

ஹரிஸ் MP யின் வேண்டு கோளுக்கிணங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் கல்முனைக்கு விஜயம்

Contributors

-சௌழாத் அப்துல்லாஹ்-

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வேண்டுகோளுக்கினங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் ஆர்.எச்.டபிள்யூ.ஏ. குமாரசிறி கல்முனைப் பிரதேசத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

 
இந்த விஜயத்தின் போது சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்டம், கல்முனைக்குடி கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டம்இ மருதமுனை மோட்டு வட்டை பிரான்ஸ் சிட்டி ஆகிய பிரதேசங்களில் பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியினால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டினால் மேற்கொள்ளப்படும் வீதி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்டார்.

 
மேலும் இப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கைகளை உடன் தயாரித்து பாராளுமன்ற உறுப்பினரின் ஊடாக அனுப்பி வைக்குமாறு பணிப்பாளர் ஆர்.எச்.டபிள்யூ.ஏ. குமாரசிறி சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை கேட்டுக்கொண்டதுடன் இதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

 

 
இவ்விஜயத்தின் போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், மாவட்ட பொறியியலாளர் எம்.ஐ.ஏ.றாசிக் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் எஸ்.எம்.ஜின்னாஹ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி ஏ.எல்.அமீர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களான எம்.ஹமீட் நௌபர் ஏ.பாவா ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.(ml)

 

 

 

 

 

 

 

 

Web Design by Srilanka Muslims Web Team