ஹலாலுக்கு எதிராக அரசின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவில்லை : பொது பல சேனா! - Sri Lanka Muslim

ஹலாலுக்கு எதிராக அரசின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவில்லை : பொது பல சேனா!

Contributors

ஹலாலுக்கு எதிரான போராட்டத்தை ஒரு சிலர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாக விமர்சிக்கின்றனர்.அரசின் தாளத்துக்கு ஆடுபவர்கள் நாமல்ல. சிங்கள பெளத்த நாட்டை பாதுகாப்பதே எமது நிகழ்ச்சி நிரலாகும் என பொது பல சேனாவின் நிறைவேற்றுக் குழு அதிகாரி  டிலந்த விதானகே தெரிவித்தார்.

இது தொடர்பாக  டிலந்த விதானகே மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சிங்கள பெளத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் ஹலால் உணவை பலாத்காரமாக திணிக்கும் நடவடிக்கை தொடர்கிறது. இதனை உடனடியாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
சிங்கள பெளத்த நாட்டில் ஹலாலுக்கு இடமில்லை. அரசாங்கம் இதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஹலாலுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். ஹலாலை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம். என தெரிவித்தார்.
– Virakesari

Web Design by Srilanka Muslims Web Team