ஹல்தும்முல்ல பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் மீது தாக்குதல் - Sri Lanka Muslim

ஹல்தும்முல்ல பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் மீது தாக்குதல்

Contributors
author image

Editorial Team

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழுள்ள ஹல்தும்முல்ல பிரதேச சபையின் தலைவர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் எதிர்க்கட்சி உறுப்பினரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இன்று காலை 5.10 அளவில் உறுப்பினரின் வீட்டிற்கு அருகில் வாளொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

 

தாக்குதலில் காயமடைந்த ஹல்தும்முல்ல எதிர்க்கட்சி உறுப்பினர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் ஹல்தும்முல்ல பிரதேச சபைத் தலைவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கு விசேட பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team