ஹஸன் அலியின் சகோதரர் ஜப்பார் அலி சிகிச்சை பலனின்றி வபாத் » Sri Lanka Muslim

ஹஸன் அலியின் சகோதரர் ஜப்பார் அலி சிகிச்சை பலனின்றி வபாத்

jabbar ali.jpg2

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் ஆசிரியருமான எம்.டி.ஜப்பார் அலி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (12) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிந்தவூரிலிருந்து திருகோணமலை செல்லும் வேளை கிண்ணியா உப்பாறு பாலத்திற்கருகில் புதன்கிழமை பிற்பகல் விபத்து இடம் பெற்றதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி -கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.நிஸாம் ஆகியோரின் இளைய சகோதரரும் ஆவார்.

இவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

jabbar ali

Web Design by The Design Lanka