ஹஸன் அலியின் சகோதரர் ஜப்பார் அலி பயணித்த வாகனம் விபத்து » Sri Lanka Muslim

ஹஸன் அலியின் சகோதரர் ஜப்பார் அலி பயணித்த வாகனம் விபத்து

jabb

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்


கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் காரும் பஸ்சும் மோதியதில் இருவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காரில் பயணித்த இருவரும் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் படுகாயமடைந்தவரை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாமின் சகோதரரான நிந்தவூர் பகுதியைச்சேர்ந்த எம்.டி.ஜப்பார் அலி (57வயது) எனவும் தெரியவருகின்றது.

கிண்ணியாவிலிருந்து மூதூர் பயணித்த பஸ்சும் நிந்தவூரிலிருந்து வந்து கொண்டிருந்த காரும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம் பெற்றதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்டவிசாரணையின்போதுதெரிய வந்துள்ளது.

jabb jabb.jpeg1.jpeg3 jabb.jpeg1

Web Design by The Design Lanka