ஹிக்கடுவை தேவாலய தாக்குதல்; இதுவரை 8 பிக்குகள் உட்பட 24 பேர் கைது! - Sri Lanka Muslim

ஹிக்கடுவை தேவாலய தாக்குதல்; இதுவரை 8 பிக்குகள் உட்பட 24 பேர் கைது!

Contributors

தென் மாகாண- ஹிக்கடுவை பகுதியில் உள்ள மூன்று தேவாலயங்கள் மீது  நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பிக்குகள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 

தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை காலி நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

நீதிமன்ற உத்தரவுக்கமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

 

ஹிக்கடுவை பகுதியில் உள்ள மூன்று தேவாலயங்கள் மீது 200 பேர் கொண்ட குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பிக்குகள் பலரும் பங்கேற்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team