ஹிஜாபை அவமதித்த சவூதி பெண்ணுக்கு மரண தண்டனை வழங்க மக்கள் கோரிக்கை » Sri Lanka Muslim

ஹிஜாபை அவமதித்த சவூதி பெண்ணுக்கு மரண தண்டனை வழங்க மக்கள் கோரிக்கை

f33

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


ஹிஜாப் அணியாமல் வெளியில் சென்ற சவூதி பெண்ணுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சவூதி அரேபியாவில் வசிக்கும் எந்த நாட்டினரானாலும் அவர் ஹிஜாப் என்னும் பெண்கள் பாதுகாப்பு உடை அணிய வேண்டும் என்ற சட்டம் அமுலில் உள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியா நாட்டில் ஹிஜாப் அணியாத இஸ்லாமிய பெண் ஒருவரை உடனடியாக கைது செய்து அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அந்த பெண், சில தினங்களுக்கு முன்னர் ‘ஹிஜாப் அணியாமல் இப்போது நான் வெளியே சென்று ஹொட்டலில் உணவு சாப்பிட போகிறேன்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து விட்டு சென்றுள்ளார்.

மேலும், அறிவித்தவாறு முகத்திரை எதுவும் அணியாமல் புகைப்படம் ஒன்றை எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பெண்ணின் இச்செயல் தற்போது பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. ‘இஸ்லாமிய கொள்கைகளை மதிக்காத அப்பெண்ணை உடனடியாக கைது செய்து தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்’ என சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தை அழித்துள்ளார்.

f

Web Design by The Design Lanka