ஹிஜாஸ் விவகாரம் ஐரோப்பிய நாடுகள் கவலை..! - Sri Lanka Muslim

ஹிஜாஸ் விவகாரம் ஐரோப்பிய நாடுகள் கவலை..!

Contributors

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் எட்டு ஐரோப்பிய நாடுகள் இணைந்து கூட்டாக கவலை வெளியிட்டுள்ளன.

இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கூற்றை வலியுறுத்தி ஹிஜாஸின் விவகாரத்தையும் உள்ளடக்கி இங்கிலாந்து, ஜேர்மனி, சுவீடன் மற்றும் பிரான்ஸ் உட்பட எட்டு நாடுகளின் மனித உரிமைகள் விவகாரத்துக்கான தூதர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

ஹிஜாஸ் நீதிமன்றுக்கு அழைத்து வரப்படாமையையடுத்து ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் அவருக்கு சட்டத்தரணி உதவியும் நிராகரிக்கப்பட்டிருந்ததாக முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. எனினும், பின்னர் அவரை பொலிசார் நீதிமன்றில் ஆஜர் படுத்தியிருந்தனர்.

இருப்பினும், ஹிஜாஸ் சார்ந்த அமைப்பு சஹ்ரான் குழுவுக்கு நிதியுதவி செய்ததாக நேற்றைய தினம் அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team