ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் பிணை கோரப்பட்டால் ஆட்சேபனை தெரிவிக்காமலிருக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானம்..! - Sri Lanka Muslim

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் பிணை கோரப்பட்டால் ஆட்சேபனை தெரிவிக்காமலிருக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானம்..!

Contributors
author image

Editorial Team

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் பிணை கோரப்பட்டால் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காதிருக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.

தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் சுதர்ஷன சில்வா இதனைத் தெரிவித்தார்.

இந்த வழக்கினை மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த சீராய்வு மனு தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி மீள அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team