ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் காத்தான்குடி தள வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள் » Sri Lanka Muslim

ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் காத்தான்குடி தள வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள்

hisbu

Contributors

நாடாளாவிய ரீதியில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன், காத்தான்குடி தள வைத்தியசாலையில் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளை 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணித்துள்ளது. இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பல்வேறுபட்ட நோயாளர்களுக்கு அவசர சிகிச்சை வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும், இதனை எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்மாக மக்கள் பாவனைக்கு கையளிக்கவுள்ளதாகவும் ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிக கட்டில்கள் இல்லாத காரணத்தினால், தீவிர சிகிச்சைப் பிரிவொன்றை ஆரம்பிக்க வேண்டிய தேவை நீண்டகாலமாக இருந்து வந்தது.

இந்தக் குறைப்பாட்டை நிவர்த்தி செய்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நோயாளர்களுக்கு மேலதிக சிகிச்சை வழங்கக்கூடிய வகையில் காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனைத்து வசதிகளையும் கொண்ட தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. – என்றார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர். எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிறப்பதிதியாக பிரதிப் பொது பணிப்பாளர் டாக்டர். லக்ஷ்மி சி சோமதுங்க ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka