ஹிருனிகா மேல் மாகாண அமைச்சராகிறார்? - Sri Lanka Muslim
Contributors

மேல் மாகாணசபை தேர்தலின் பின்னர் ஹிருனிகா பிரேமசந்திரவை மாகாண அமைச்சராக நியமிக்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அரசாங்க கட்சி அமைச்சர்கள் மத்தியில் இது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

 

 

மேல் மாகாணத்தி;ல் அவர் ஏற்கனவே கட்சியின் இணை அமைப்பாளராக செயற்படுகிறார்.

 

 

இந்தநிலையில் அவரின் திறமைகளை கருத்திற்கொண்டு மாகாண அமைச்சை அவருக்கு வழங்கலாம் என்று அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, மைத்திரிபால, சாலிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தின் போது குறிப்பிட்டனர்.

 

 

இதேவேளை மேல் மாகாணசபை தேர்தலில் ஹிருனிக்காவின் வெற்றிக்காக அனைத்து அமைச்சர்களும் தமது ஆதரவை தரவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.(lw)

Web Design by Srilanka Muslims Web Team