ஹுமாத்துகளுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமிடையில் சந்திப்பு - Sri Lanka Muslim

ஹுமாத்துகளுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமிடையில் சந்திப்பு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியில் மௌலவிப் பட்டம் பெற்று தற்போது கட்டாரில் பணிபுரிகின்ற ஹுமாத்துகளுக்கும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் அல்ஹாஜ் ரவூப்  ஹக்கீம் அவர்களுக்குமிடையில் 21-11-2016; சந்திப்பொன்று ஹுமாத்களின் கட்டார் கிளையின் தலைவர் S.I.M.Iபுஹாரி (ஹாமி) தலைமையில் கட்டார் நாட்டின் தலைநகர் டோஹாவில் அமைந்துள்ள CONCORDE HOTEL  லில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் இலங்கையின் தற்போதய நிலைப்பாடு பற்றியும் அமைச்சரினால் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டது.

பின்னர் ஹுமாத்களினால் எமது கல்லூரியின் வளர்ச்சிப்பாதை கவனத்தில் கொண்டு ஒரு சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு, மஹஜரும் கையளிக்கப்பட்டது.மேலும் அமைச்சருக்கு அல்-ஹாமியா அறபுக் கல்லூரின் பழைய மாணவ சங்கத்தின் (ஹுமாத்) கட்டார் கிளை சார்பாக நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஷ்ஷெய்க்-ஏ.ஏ.எம்.பர்ஸாத் (ஹாமி)
செயலாளர்
ஹுமாத் பழைய மாணவ சங்கம்,
கட்டார் கிளை.

h h-jpg2 h-jpg2-jpg3 h-jpg2-jpg3-jpg5

Web Design by Srilanka Muslims Web Team