ஹொரவ்பொத்தானை பதியூதீன் மஹ்மூது மஹா வித்தியாலயத்தின் பெண்கள் விடுதிக்கு அடிக்கல் » Sri Lanka Muslim

ஹொரவ்பொத்தானை பதியூதீன் மஹ்மூது மஹா வித்தியாலயத்தின் பெண்கள் விடுதிக்கு அடிக்கல்

ho

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

ஹொரவ்பொத்தானை பதியூதீன் மஹ்மூது மஹா வித்தியாலயத்தின் பெண்கள் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (09) பாடசாலையின் அதிபர் எஸ்.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் தளபதியின் சார்பில்
வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான கெப்டன் மன்ஜூல திஷாநாயக்க பிரதம அதிதியாக கலந்து அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

அதிமேதகு ஜனாதிபதி கடந்த ஓக்டோபர் மாதம் 09ம் திகதி ஹொரவ்பொத்தானை பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த போது அப்பாடசாலை மாணவர்களினால் அப்பாடசாலையின் வளப்பற்றாக்குறை தொடர்பாகவும் பாடசாலையினை அபிவிருத்தி செய்து எதிர்கால மாணவர்களின் கல்வியில் அக்கறை காட்டுமாறு அக்கடிதத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அன்றைய தினமே இலங்கை கடற்படையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்தார்.

அதேவேளை இலங்கை கடற்படையினர் 61மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு மாடி கட்டிடங்களை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (09) நடைபெற்றது.

ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில் 24 கிராமங்களைச்சேர்ந்த மாணவிகள் மிகவும் கல்வி நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு வருவதாக மாணவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கொண்ட ஜனாதிபதிக்கும் .கடற்படையினருக்கும் மாணவர்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வில் பௌத்த மத தலைவர்கள் -பிரதேச செயலாளர் மற்றும் கல்வி அதிகாரிகள் -பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ho ho.jpeg2 ho.jpeg2.jpeg3 ho.jpeg2.jpeg6

Web Design by The Design Lanka