​மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தினால் “அடையாளம்” நூல் வெளியீடு » Sri Lanka Muslim

​மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தினால் “அடையாளம்” நூல் வெளியீடு

IMG_1169

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவனல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் மற்றும் ஜும்ஆ பள்ளிவாசல்களின் வரலாற்று சுருக்கம் அடங்கிய “அடையாளம்” நூல் நேற்று சனிக்கிழமை வெளியீட்டு வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் தலைமையில் மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், இன்னாள் தேசிய ஊடக நிலையத்தின் தலைவருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பிரதம அதிதியாகவும், மாவனல்லை கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.நஜீப் (நளீமி) சிறப்பதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

அரநாயக்க, ரம்புக்கனை, ஹெம்மாத்தகம மற்றும் மாவனல்லை உள்ளிட்ட மாவனல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் மற்றும் ஜும்ஆ பள்ளிவாசல்களின் வரலாற்றினை உள்ளடக்கியதாக ‘அடையாளம்’ நூல் ஊடகவியலாளர் ராயிஸ் ஹஸன், அஜமன் சலாம், ரிபாஸ் மொஹமட், ஹனான் ஹ{ஸைன் மற்றும் பஹாட் மொஹமட் ஆகியோரால் எழுதப்பட்டு ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தினால் வெளியீட்டு வைக்கப்பட்டது.

நூல் வெளியீட்டு நிகழ்வின் வரவேற்புரையை ஸாஹிராக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு அதிபர் ஜயூப் ஆசிரியர் நிகழ்த்தியதுடன், நூல் விமர்சனத்தை நவமணி ஊடகவியலாளர் ஆதில் அலி சப்ரி நிகழ்த்தினார். நிகழ்ச்சியை சப்ராஸ் (இஸ்லாஹி) தொகுத்து வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

DSC_1107 ec30050f-ac8c-4c5d-95bc-fc5a46760f73 IMG_1169

Web Design by The Design Lanka