10வது தேசிய அல்குர்ஆன் போட்டி » Sri Lanka Muslim

10வது தேசிய அல்குர்ஆன் போட்டி

????????????????????????????????????

Contributors
author image

A.S.M. Javid

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 10வது தேசிய அல்குர்ஆன் போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கான பணப்பரிசுகளும், சன்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமயவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் கடந்த வியாழக்கிழமை(12) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தபால்,தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீமும் கௌரவ அதிதிகளாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, இலங்கைக்கான பலஸ்தீன் நாட்டு தூதுவர், இலங்கைக்கான இந்தோனேசிய தூதரகத்தின் தூதுவர், அமைச்சின் உயர் அதிகாரிகள், மௌலவிமார்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற 73 பேர் அதிதிகளால் பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் தமிழ் மொழியிலான விஷேட உரையை அஷ்ஷெய்க் மொஹமட் பக்கீஹூடீனும் (நளீமி) ,சிங்கள மொழியிலான விஷேட உரையை மௌலவி ரி.பி. றம்டீன் நூரியும் நிகழ்த்தினர். வரவேற்புரையை திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக்கும் நன்றியுரையை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் றியாஷா எம்.நௌபல் வழங்கியதுடன் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் பிரதான உரை நிகழ்த்தினார்.

இதன்போது இவ்வருடம் தேசிய போட்டியில் தெரிவு செய்யப்பட்டு கடந்த மாதம் எகிப்தில் நடைபெற்ற சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பாக 5ஆம் இடத்தைப் பெற்ற ஹாபிழ் இஸ்ஸத் விசேஷடமாக பிரதம அதிதி உள்ளிட்ட ஏனைய அதிதிகளால் கௌரவிக்கப்பட்டார்.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

Web Design by The Design Lanka