10 இலட்சம் கட்டார் றியாழ்களையும் நகைகளையும் திருடிய இலங்கைப்பெண் கட்டாரில் கைது » Sri Lanka Muslim

10 இலட்சம் கட்டார் றியாழ்களையும் நகைகளையும் திருடிய இலங்கைப்பெண் கட்டாரில் கைது

qa6

Contributors
author image

முஸாதிக் முஜீப்

இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருத்தி நகைக்கடை ஒன்றில் திருடியமை மற்றும் அவள் வேலை செய்த இடத்தில் திருடியமை போன்ற குற்றச் செயல்கள் காரணமாக கட்டாரின் நீதி மன்றம் ஒரு வருட சிறைவாசகம், நாட்டுக்கு செல்வதற்கான தற்காலிக தடை என்பன தண்டனையாக வழங்கியுள்ளது.

கழுத்தில் போடும் தங்கச்சங்கிலி,காதிலணியும் தோடு, மற்றும் 100,000கட்டார் றியாழ்களை போன்றனவற்றை திருடியுள்ளமை விசாரணை மூலம் தெரிய வந்தது.

இந்த பெண் உறவினர் ஒருவர் வீட்டிலேயே வேலை பார்த்திருக்கிறாள்.அவர்கள் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற பொழுதே தனது நகையையும் சில ஐரோப்பிய நாணயங்களும் காணமல் போயுள்ளன.இந்த பணிப் பெண்ணின் அறையில் தேடிப் பார்த்ததை அடுத்து திருட்டுப் போன பணம்,நகை,பெறுமதியான கண்ணாடி ஒன்று,இலங்கைக்கு பணம் அனுப்பியமைக்கான வங்கி காசோலைப் பிரதி ஆகியன கண்டு பிடிக்கப்பட்டன.இந்த பணிப் பெண்ணிண் மாத சம்பளம் 900 கட்டார் றியாழ்கள் மட்டுமே.ஆனால் சொந்த நாட்டிற்கு 800,400 கட்டார் றியாழ்களை மாதத்திற்கு அனுப்பியுள்ளாள்.

திருட்டுப் போன நகையை உடையவர்கள் தனது அறையை பயன்படுத்தியதாகவும் அவர்களுக்கு நகையை கொண்டு செல்ல முடியாமல் போனதாகவும் நீதி மன்றத்தில் கூறியிருந்தாள் இருப்பினும் தற்போதைய ஆதாரங்களை வைத்து ஒரு வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

(file image)

Web Design by The Design Lanka