1000 ரூபா வழங்க தயார்;கம்பனிகள் அறிவிப்பு. - Sri Lanka Muslim

1000 ரூபா வழங்க தயார்;கம்பனிகள் அறிவிப்பு.

Contributors

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க கம்பனிகள் தயாராக இருப்பதாக முதலாளிமார் சம்மேலனத்தின் ஊடகபேச்சாளர் ரொஸான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

ரதெல்ல பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், தோட்ட நிர்வாகங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றாக இணைந்து இந்த துறையை நேர்த்தியா முன்னெடுத்து செல்லவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்திற்கு வருவதற்கு தொழிற்சங்கங்கள் முன்வரும் நிலையில் அதற்கு அமைவாக செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் முதலாளிமார் சம்மேலன அதிகாரிகளுடன் இணைந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க முடியுமெனவும் சம்மேலனத்தின் ஊடகபேச்சாளர் ரொஸான் ராஜதுரை தெரிவித்துள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team