110 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடு..! - Sri Lanka Muslim

110 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடு..!

Contributors
author image

Editorial Team

தற்போது பற்றாக்குறையாக உள்ள 50 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை அவசர கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அவற்றில் எக்ஸ்ரே படங்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

அவசர கொள்முதல் முறையின் ஊடாக அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது 110க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் அரச மருத்துவமனைகளில் பற்றாக்குறையாக உள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team