கட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் » Sri Lanka Muslim

கட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

ll333

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இலத்திரனியல் உலகத்தில் இதயங்களை மார்க்கத்திற்கு அப்பால் இழந்துவரும் இஸ்லாமிய உறவுகளுக்கு நாம் செல்லவேண்டிய பாதையை பண்பாக காட்டுவதற்கு இந்நிகழ்ச்சிகள்  எஸ்.எல்.டி.சி. கட்டார் அமைப்பினால் வடிவமைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வருகிறது.

அந்நிய கலாசார கழிவுகளுக்குள் புதையுண்டுவரும் நமது முஸ்லிம் இளைஞர் யுவதிகளை மீட்டெடுத்து நேரிய பாதையில் நிலைத்து நிற்க்க வைப்பதுதான் இஸ்லாத்தின் குறிக்கோள்
இலட்சியப்பாதையை இவ்வுலகத்தில் மட்டும் வடிவமைத்து குறுகிய சுகங்களை சுவிகரிக்கத்தெரிந்தவர்களை நாளைய உலகின் நிரந்தர சுகங்களுக்குள் வாழவைக்க எதிர் கொள்ளும் தடைகளை காணாமல் கரையவைக்க வழிகாட்டும் இந் நிகழ்ச்சியை தவறவிடவேண்டாம்.

உள்ளங்களை ஊடறுத்து உண்மைகளை தெளியவைக்க மாருதமாய் வரும் உரைகளின் தலைப்புக்கள் இதோ!

01. சுவர்க்கத்தில் அள்ளாஹ்வின் தூதருடன்…
02. இலட்சியப் பாதையில் தடைகளும் தாண்டுவதற்கான வழிகளும்
இத்தலைப்புகளில் பிரபல உலமாக்களான அஷ்ஷெய்க் அப்துல் பாஸித் புகாரி, அஷ்ஷெய்க் முஹம்மத் றஹ்மானி ஆகியோர்களால்
 இம்மாதம் 31ம் திகதி மார்ச் மாதம் 2017 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 09.30 மணி வரை பனார் கேட்போர் கூடத்தில் சொற்பொழிவுகளால் உள்ளத்தை நிரப்பலாம்

மேலதிக தகவல்களுக்கு ளுடுனுஊ யின் இணையத்தளத்திற்கு பிரவேசியுங்கள் www.sldcqatar.org
பெண்களும் கலந்து கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்நிகழ்வுகளில் கலந்து பயன்பெறுமாறு ளுடுனுஊ கட்டார் அமைப்பினர் கட்டார் வாழ் உறவுகளுக்கு வாஞ்சையுடன் அழைப்புவிடுக்கின்றனர்.
தகவல்: அபு உமைர் ஆல் சூரி

ll

Web Design by The Design Lanka