118 நாடுகளிலிருந்து 1.38 மில்.யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில்! - Sri Lanka Muslim

118 நாடுகளிலிருந்து 1.38 மில்.யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில்!

Contributors

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற 118 நாடுகளிலிருந்து சுமார் 1.38 மில்லியன் யாத்திரிகர் சவூதி அரேபியா வந்திருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சரும் ஹஜ் உயர்மட்டக் குழுவின் தலைவருமான இளவரசர் முஹம்மத் பின் தையாப் அறிவித்துள்ளார்.

இந்த யாத்திரிகர்கள் பாதுகாப்பாகவும் சிக்கலின்றியும் நாட்டை வந்தடைந்ததாக இரு புனித பள்ளிவாசல்களின் பொறுப்பாளரான மன்னர் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,379,531 வெளிநாட்டு ஹஜ் யாத்திரிகர்களில் 55 வீதமானவர்கள் அதாவது 752,424 ஆண்கள் என்றும் 627,107 பேர் (45 வீதம்) பெண் யாத்திரிகர்கள் என்றும் இளவரசர் முஹம்மத் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 377,439 (21 வீதம்) வெளிநாட்டு யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

ஹஜ் கடமைக்காக 1.29 மில்லியன் யாத்திரிகர்கள் வான் வழியாகவும், 72,000க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கடல் வழியாகவும், 14,898 யாத்திரிகர்கள்  கடல் வழியாகவும், 14,898 யாத்திரிகர்கள் தரைவழியாகவும் ஹஜ் கடமைக்காகக் வந்திருப்பதாக இளவரசர் முஹம்மத் மேலும் கூறினார்.news.lk

Web Design by Srilanka Muslims Web Team