12 நாடுகளுக்கு பயண தடை விதித்தது பாகிஸ்தான் - Sri Lanka Muslim

12 நாடுகளுக்கு பயண தடை விதித்தது பாகிஸ்தான்

Contributors

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்றுமுன்தினம் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பிரேசில், போட்ஸ்வானா, கொலம்பியா, தென்ஆப்பிரிக்கா, தான்சானியா, பெரு, கொமொரோஸ், கானா, கென்யா, மொசாம்பிக், ருவாண்டா மற்றும் சாம்பியா ஆகிய 12 நாடுகளுக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடை 23ஆம் திகதி (நாளை) முதல் அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team