12 பேரை கொலை செய்த நபர் கைது - Sri Lanka Muslim
Contributors

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நீர்கொழும்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய லொகுகே லசந்த பிரதீபன் எலியாஸ் எனும் தங்கல்லே சுத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த வருடம் மிரிஸ்ஸ பகுதியில் அமில ஹெட்டிகே எனும் நபர் கொலை உட்பட 12 கொலை சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபருடன் சம்பத் ரணசிங்க எனும் 41 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Web Design by Srilanka Muslims Web Team