12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடக்கம் - Sri Lanka Muslim

12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்

Contributors

அமெரிக்காவில் பைசர், மொடர்னா மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் என 3 நிறுவனங்களின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பைசர், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ரா ஜெனேகா ஆகியவற்றுடன் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி என உலகளவில் மூன்று தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் உட்பட மேலும் பல மருந்துகளும் பயன்பாட்டில் உள்ளன. தற்போது உலகளவில் வயது மூத்த நபர்களுக்கு, முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது என பைசர் தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியானது.

Web Design by Srilanka Muslims Web Team