13வது திருத்தச் சட்டங்களின் யாதார்த்தமும் சில உண்மைகளும் - Sri Lanka Muslim

13வது திருத்தச் சட்டங்களின் யாதார்த்தமும் சில உண்மைகளும்

Contributors

(அஷ்ரப் ஏ சமத்)

 

தமிழ்  மக்களுக்கு உரிய சகல உரிமைகளையும்  கட்டாயம் அரசு வழங்கவேண்டும்.  இந்த நாட்டில் வாழும் சிறுபாண்மை இனங்களான மலையக மக்கள், தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் அவரவர்களுக்கான அரசியல் அதிகாரங்கள் மற்றும் அவர்களுக்கான சகல உரிமைகளையும்  எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் அதனை வழங்கல் வேண்டும்.

இதற்காகவே நான் கடந்த 40 வருடகாலமாக சிறுபான்மை மக்களுக்காக போராடி வருகின்றேன்.  என   அமைச்சர் வாசுதேவ நானயக்கார குறிப்பிட்டார்.

மேற்கண்டவாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இணைப்புச் செயலாளர் கலாநிதி மோகண் 13வது திருத்தச் சட்டங்களின் யாதார்த்தமும்; சில உண்மைகளும் எனும் தலைப்பில் நூலொன்றை தமிழ் சிங்கள மொழிகளில் வெளியிட்டிருந்தார். இந் நூல் வெளியீட்டு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் வாசு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வு ராஜகிரியையில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சகல தமிழ் கட்சிகளின் பிரநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியும் கலந்து கொண்டார்.அண்மையில் நடந்து முடிந்த வட மாகாணசபையைத் தேர்தலைக்கூட நடாத்தவிடாமல் பல அமைச்சர்கள் எதிர்த்தனர்.

நானும் அமைச்சர் ரவுப் ஹக்கீமும் இத் தேர்தலை கட்டாயம் நடாத்த  வேண்டுமென ஜனாதிபதியிடமும் அமைச்சரவையிலும் கூறிவந்தோம்.

ஆனால் ஸ்ரீ.ல. சுதந்திரக் கட்சி கூட கடந்த காலங்களில் மாகாணசபையையும், தமிழர்களுக்க உரிமைகளையும் வழங்குவதில் எதிர்ப்பு தெரிவித்தே வந்தனர். ஆனால் அவர்கள் தற்பொழுது அதனை ஏற்றுள்ளனர். மாகாணசபையில் அவர்களது ஆட்சி உள்ளது.  அண்மையில் பாராளுமன்றத்தில்  வரவுசெலவுத் திட்டத்தின் நிறைவு உரையின்போது ஜனாதிபதி தமிழ் தேசிய கட்சியினரை அதிகாரங்கள் பற்றி பேசுவதற்கு அழைத்துள்ளார்.

அந்தளவுக்காகவது அவர்கள் இறங்கி வந்துள்ளதை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் ஸ்ரீ.ல.சு. கட்சியிக்கு ஜ.தே. கட்சியில் இருந்து வந்த ஒரு சிலரே தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்குவதை எதிர்க்கின்றனர். என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
VAT

12345

 

Web Design by Srilanka Muslims Web Team