13 நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கை வருவதற்குத் தடை..! - Sri Lanka Muslim

13 நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கை வருவதற்குத் தடை..!

Contributors

மத்திய கிழக்கு நாடுகளான கட்டார், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரெய்ன் மற்றும் குவைட் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கைக்கு சமூகமளிப்பது ஜுலை 1 ஆம் திகதி முதல் ஜுலை 13 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொவிட்–19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணி அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகை தந்த 100 பேருக்கு ஒரே நாளில் கொவிட்-19 தொற்று காணப்பட்டமை இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை அமைச்சரவையுடன் கலந்தாலேசித்து பெற்றுக் கொண்டதாக அந்த செயலணி மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு மீளத்திரும்ப எதிர்பார்த்துள்ள இந்த நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பயணத்தில் இந்தத் தீர்மானம் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team