13 மில்லியன் செலவில் பேருவளை நகரில் ‘தேசிய மீலாத் விழா’ - 2014 - Sri Lanka Muslim

13 மில்லியன் செலவில் பேருவளை நகரில் ‘தேசிய மீலாத் விழா’ – 2014

Contributors

அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆண்டுதோரும் இடம்பெறும் ‘தேசிய மீலாத் விழா’ இந்த   ஆண்டுஎதிர்வரும் 14ம் திகதி பேருவளை நகரில் நடைபெற இதனையொட்டி அப்பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களை அபிவிருத்தி செய்யவும் பிரதேச அபிவிருத்திக்குமென 13 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட் டிருப்பதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் நாயகம் எம்.எச்.எம். ஸமீல் தெரிவித்துள்ளார் .

 

விழா ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று பேருவளையில் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், எம்.பிகள், மாகாண உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். தேசிய மீலாத் விழா ஆரம்ப வைபவம் பேருவளை மஸ்ஜிதுல் அப்ராரில் இடம்பெற உள்ளதோடு பிரதான விழா பேருவளை நகர சபை மைதானத்தில் நடைபெறுகிறது.

பேருவளை மற்றும் களுத்துறை மாவட்ட கலை கலாசார பாரம்பரியங்களை மையமாக வைத்து கலை கலாசார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட உள்ளதாக கூறிய பணிப்பாளர் தெரிவித்துள்ளார் .

 

களுத்துறை மாவட்ட முஸ்லிம் வரலாற்று நூலொன்றை வெளியிடவும் திட்டமிடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். தேசிய மீலாத் விழா வைபவம் பிரதமர் டி.எம். ஜெயரத்னவின் தலைமையில் நடைபெறுகிறது. முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், கல்விமான்கள் உட்பட பலரும் இதில் பங்கேற்க உள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team