15 ஊடகவியலாளர்களின் கறுப்புப்பட்டியல் – அமைச்சரின் திட்டத்தை நிராகரித்த ஜனாதிபதி மஹிந்த! - Sri Lanka Muslim

15 ஊடகவியலாளர்களின் கறுப்புப்பட்டியல் – அமைச்சரின் திட்டத்தை நிராகரித்த ஜனாதிபதி மஹிந்த!

Contributors

 

கொமன்வெல்த் மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்கு 15 வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு தடைவிதிப்பதற்கு இலங்கை ஊடகத்துறை அமைச்சு முன்வைத்த திட்டத்தை மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வரும் 15 வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் பெயர்களை கொண்ட கறுப்புப்பட்டியல் ஒன்றை, சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தயாரித்திருந்தார்.
இவர்களை கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க அனுமதி மறுக்கும் திட்டம் குறித்து  கெஹலிய ரம்புக்வெல எடுத்துக் கூறியிருந்தார்.
அந்த கறுப்புப்பட்டியலை வாங்கிப் பார்த்த  மகிந்த ராஜபக்ச, அனைவரையும் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
அவர்களை அனுமதிக்கா விட்டால், மிகப்பெரியளவில் அவர்களால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றும், கெஹலிய ரம்புக்வெலவிடம் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.(bn)
கெஹலிய ரம்புக்வெல கையளித்த அந்த கறுப்புப்பட்டியலில் சனல் 4 தொலைக்காட்சியில் சிறிலங்காவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய, கல்லும் மக்ரேயின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team