15 வயது சிறுமி துஷ்பிரயோகம் மாலைதீவு முன்னாள் அமைச்சர் கைது..! - Sri Lanka Muslim

15 வயது சிறுமி துஷ்பிரயோகம் மாலைதீவு முன்னாள் அமைச்சர் கைது..!

Contributors
author image

Editorial Team

கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவின் முன்னாள் அமைச்சர் மற்றும் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உள்ளிட்ட 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரான மொஹமட் அஷ்மலி, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாலைத்தீவின் முன்னாள் இராஜாங்க அமைச்சரை, பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு கைது செய்துள்ளது. எதிர்வரும் 16ம் திகதி, சந்தேகநபர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று (06) தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team