15.8 மில்லியன் வாக்காளர்களின் தீர்ப்பு: இன்று » Sri Lanka Muslim

15.8 மில்லியன் வாக்காளர்களின் தீர்ப்பு: இன்று

voted-UVA_election

Contributors
author image

M.M.A.Samad

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களினால் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு ஏறக்குறைய 50 நாட்களாக மக்கள் மன்றில் முன்வைக்கப்பட்ட கொள்கைகள், எதிர்காலத்திட்டங்கள் அவை கலந்த வாக்குறுதிகள் என்பவற்றிக்கான தீர்ப்பை இன்று வெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகைமை பெற்ற ஏறக்குறைய ஒரு கோடி 57 இலட்சத்து 60,867 வாக்காளர்கள் தங்களது வாக்குகளின் ஊடாக வழங்கவுள்ளனர்.

சக்திமிக்க வாக்குகள் அரசியல் கட்சிகளின் செல்வாக்கையும், இருப்பையும், வெற்றி தோல்விiயும் நாட்டுக்கும், உலகிற்கும் அறிவிக்கவுள்ளன. அரசியல் கட்சிகளின் கடந்த கால நடவடிக்கைகளின் பிரதிபலிப்புக்களை வாக்காளர்கள் தங்களது வாக்குகளினூடாக பறைசாட்டவுள்ளனர்.

கருத்துச் சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும், மனச்சாட்சிக்கு மதிப்பளித்து வாக்களிக்கும் சுதந்திரமும் உரிமையும்  ஒரு ஜனநாயக நாட்டின் சிறப்பம்சங்களாகும். அத்தகைய ஜனநாயகச் சிறப்புப் பண்புகளில் ஒன்றான வாக்களிக்கும் உரிமையை மக்கள் வெளிப்படுத்தும் இந்நாளில்; அவர்கள் சுதந்திரமாக வாக்களிக்க வழிவிடப்படுவதும், அவர்களின் வாக்குரிமைக்கு மதிப்பளிக்கப்படுவதும்; அவசியமாகும்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

சுதந்திரத் தேசமொன்றில்; ஜனநாயக உரிமையை முறையாகப் பயன்படுத்துவதற்கு கிடைக்கும் சந்தர்ப்பமே தேர்தலாகும். பல்வேறு விடயங்களுக்காக வாக்களிக்கும் சந்தர்ப்பம் பலருக்கு கிடைக்கின்றபோதிலும், ஒரு கிராமத்தை, நகரத்தை, மாநகரத்தை, மாகாணத்தை, நாட்டை ஆளுகின்ற ஆட்சி அதிகாரத்தினை வழங்குவதற்காக அத்தேசத்தில்; வாழுகின்ற அந்நாட்டுப் பிரஜைகளில்; வாக்களிக்க தகைமை பெற்றவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் எனப்வற்றைக் குறிப்பட முடியும்.

நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கும், பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகள், என்பவற்றிற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கும் 5 வருடங்களுக்கு ஒரு முறையும்,  உள்ளுராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறையும்; வாக்களிக்கும் சந்தர்ப்பம் இந்நாட்டு  மக்களுக்குக்; கிடைக்கிறது.

அதனடிப்படையில,; இன்று நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலினூடாக ஒவ்வொரு வாக்காளர்களுக்கு தங்களது சக்திமிக்க வாக்கை மனட்சாட்சியொடு அளிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ;இச்சந்தர்ப்பத்தினை முறையாகப் பயன்படுத்த வேண்டிய முக்கிய கடமையைச்; சுமந்தவர்களாக ஒவ்வொரு வாக்களாரும் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பது அவர்களது அரசியல் உரிமை மாத்திரமின்றி தார்மீகப் பொறுப்புமாகும்.

1939ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க நகரசபைச் சட்டத்தின் கீழ் நகர சபைகளும,; 1947ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மாநகர கட்டளைச் சட்டத்தின் கீழ் மாநகர சபைகளும், 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் பிரதேச சபைகளும் உருவாக்கப்பட்டு அவ்வுள்ளுராட்சிக் அக்கட்டமைப்புக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களும், அச்சபை உறுப்பினர்களினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளும் அவ்வுள்ளுராட்சி மன்ற அதிகார எல்லைக்குள் வாழும் மக்களை எந்தளவு திருப்தி அடையச் செய்திருக்கின்றன என்பதை மீண்டும் இடைபோடுவதற்காக  341 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் உறுப்பினர்களாகத் தெரிவாதற்கு போட்டியிட்ட கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அவர்களுக்கான மக்கள் தீர்ப்பை இன்று நள்ளிரவுக்கு முன்னர் அல்லது நாளை அதிகாiலை அறிந்துகொள்ளக் கூடியதாகவிருக்கும்.

1987 ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 13வது அரசியலமைப்புச் சீர்திருத்த்தின் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட 9 மாகாண சபைகளின் அதிகாரங்களினூடாக அந்தந்த மாகாணங்களின் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு உட்பட அதிகாரமிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால், மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் இது வரை வழங்கப்படவில்லை.

அதிகாரங்களைப் பரவலாக்குவதற்காக 2011ஆம் ஆண்டு மாகாணகளுக்காக பிரிக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் மொத்த எண்ணிக்கை 335 ஆகும். இதில் 23 மாநகர சபைகளும் 41 நகர சபைகளும் 271 பிரதேச சபைகளும் அடங்கும்.

இருப்பினும், 2011ஆம் ஆண்டின் பின்னர் மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்பவும் அரசியல் தேவைக்ளுக்காகவும் பிரதேச சபைகளாக இயங்கியவை நகர சபைகளாகவும், நகர சபைகள் மாநகர சபைகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதுடன் புதிதாக பிரதேச சபைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அண்மையில் மலையகத்தில் உருவாக்கப்பட்டுள்ள நான்கு பிரதே சபைகளையும் புதிதாக உருவாக்கப்பட்ட பிரதேச சபைகளும் அடங்கலாக 341 உள்ளுராட்சி மன்றங்கள் தற்போது உள்ளன.

341 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் இன்றைய தேர்தலானது, உள்ளுராட்சி மன்றத்தேர்தல் வரலாற்றில் தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த கலப்புத் தேர்தலாக நடைபெறுகிறது.  இத்தேர்தலில்  நேர்மையானவர்களைத் தெரிவு செய்வதற்கு மக்கள் தங்களது வாக்குச் சக்;திகளைப்  பயன்படுத்த வேண்டும்;. இன்று நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்; நான்கு தசாப்தங்களின் பின்னர்; கட்சிக்கு மாத்திரம் வாக்களிக்கும் முதல் சந்தர்ப்த்தை வாக்காளர்கள் பெரும்பாலானோருக்கு வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏறக்குறைய ஒரு கோடி 57 இலட்சத்து 60,867 வாக்காளர்கள் தகைமை பெற்றுள்ளனர். இத்தேர்தல் மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகள் அடங்காலாக 25 நிர்வாக மாவட்டங்களிலுமுள்ள 24 மாகாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள் அடங்கலாக மொத்தம் 341 உள்ளுராட்சி மன்றங்களுக்காக தொகுதி மற்றும் விகிதாசார அடிப்படையில் 8,356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.  

மேலும், 13,420 வாக்களிப்பு நிலையங்கள்; வாக்களிப்புக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதுடன், இத்தேர்தல் கடமைக்காக 1 இலட்சத்து 75 ஆயிரம்; அரச ஊழியர்கள் பணிக்காக அமர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 65,758 பொலிசார் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

இருமடங்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலாகத் இத்தேர்தல் நடைபெறவுள்ளதனால் இத்தேர்தலுக்காக  500 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. அவற்றறுடன் 341 உள்ளுராட்சி சபைகளுக்கும் நடைபெறவுள்ள இத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாக ஏறக்குறை 57 ஆயிரத்து 256 வேட்பாhளர்கள் போட்டியிட்டிருக்கின்றனர்.

இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவுகள் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக 74 கோடி ரூபா  செலவிட வேண்டியுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஏலபே சுட்டிக்காட்டியுள்ளது.

பதிவு செய்யப்பட்டுள்ள 70 அரசியல் கட்சிகளில் இயங்கும்; கட்சிகள் பல இத்தேர்தலில் தனித்தும் கூட்டிணைந்தும் களத்தில் இறக்கி மக்களின் வாக்குகளைக் கோரியிருக்கின்றன. தென்னிலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இவற்றோடு பல சிறிய கட்சிகளும் இணைந்தும் தனித்தும் போட்டியிட்டதுடன்;,  வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தனித்தும் கூட்டமைத்தும் தேர்தலில்; களமிறங்கியிருந்தன.

அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் சார்பில் களமிறங்கி; இத்தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் இவ்வுள்ளுராட்சி மன்றங்களுக்குரித்தான அதிகாரங்களை மக்கள் நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும். ஆந்த எதிர்பார்ப்புக்காள தீர்வை மக்களால் வழங்கப்படவுள்ளன.

உள்ளுiராட்சி மன்றங்களின் அதிகாரங்கள்
ஒரு நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் கிரமாங்களில் வாழும் மக்களின் சமூக, பொருளாதா அபிவிருத்தியிலே தங்கியுள்ளன. கிரமாங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் கிரமா மட்டங்களில் உருவாக்கபட்டுள்ள சபைகளினூடாக அவ்விபிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

உள்ளுராட்சி சபை மட்டத்தில் நிர்வாக மாற்றம், அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தான தீர்மானங்களை நிறைவேற்றுவதும், அவற்றை செயலுருப்படுத்துவதும் அவற்றின் மூலம்; மக்களைப் பயனடையச் செய்வதும், அந்நடவடிக்கைகளில் மக்கள் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதும் என்ற பல்வேறு நோக்கங்களை அடைவதற்காக உருவாக்கப்பட்ட மாநகர, நகர மற்றும சபைகளுக்கு பல்வேறு அதிகாரங்களும் பொறுப்புக்களும்; வழங்கப்பட்டுள்ளன.  

ஒரு பிரஜையின் பிறப்பு முதல் இறப்பு வரை வழங்கப்படும் சேவைகளைக் கண்காணிப்பதற்கான முன்னுரிமைப்படுத்தல,; மக்கள் பிரதிநிதிகளினதும், மக்களினதும் பங்கேற்புடன் கொள்கைகளை வகுத்து தீர்மானங்களை மேற்கொண்டு அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தல் இவற்றினூடாக கிரமாங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்களின்; சமூக, பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண முடியும்.

உள்ளுராட்சி மன்றங்களுக் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களில் வீதிகளின் பொறுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பொது மக்களின் வசதிகள் உட்பட்ட அனைத்துமே பொது வீதிகளின் கட்டமைப்பிலேயே தங்கியுள்ளது. குறிப்பிட்டதொரு உள்ளுராட்சி; பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ள வீதிக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வது பௌதீக அபிவிருத்தியின் அடிப்படை நிபந்தனையாகும்.

வீதிகளுக்கு அருகேயுள்ள கட்டிடங்களுக்கும், வீதிகளுக்கும் ஏற்படக்கூடிய தடைகளைத் தடுத்துப் பேணுதல், வீதிகளைச் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றிக் கொள்வதைத் தடுத்தல், வீதிகளுக்கு ஏற்படக்கூடிய சேதங்களைத் தடுத்தல், வீதிகளுக்கு ஏற்படக்கூடிய தொல்லைகளைத் தடுத்தல். பொது உரிமை, அபிலாசை மற்றும் வீதிகளினூடாக ஏற்படும் வசதிகளைப் பேணுதல்;ளூ பராமரித்தல்;. புதிய வீதிகளையும், பாலங்களையும், சுரங்க வழிகளையும், அல்லது வேறு பொது வழிகளையும் வகுத்து நிருமாணித்தல், வீதிகளை விரிவுபடுத்தல்;, திறந்து வைத்தல், அபிவிருத்தி செய்தல என வீதிகள் தொடர்பாக பல்வேறு பொறுப்புக்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்குரியதாகவுள்ளன, ஆனால் இந்தப் பொறுப்புக்கள் கடந்த காலங்களில் உள்ளுராட்சி மன்றங்களினால் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?
உள்ளுராட்சி; பிரதேச எல்லைக்குட்பட்ட மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதும், பேணுவதும், நிர்வகிப்பதும் உள்ளுராட்சி சபைகளாகும். வடிகாலமைப்புப்புகளை ஏற்படுத்தல்,  பொது மலசலகூடங்களை அமைத்தல், மலசலமகற்றுதல்;, திண்மக்கழிவுகளை  அகற்றுதல், அவற்றை முகாமைத்துவம் செய்தல், பொதுச் சுகாதாரத்துக்கு ஒவ்வாத கட்டிடங்களை அகற்றுதல்;, தூய நீரை வழங்ககுதல், பராமரிதல்;, அழுக்கு நீரை அகற்றுதல் போன்ற மக்களின் பொதுச்சுகாதாரம் தொடர்பில் பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின்  நல்வாழ்விற்குச் சாதகமான சூழலை உருவாக்குவது உள்ளுராட்சி; சபைகளின்  முக்கிய பொறுப்பாகும்.

பொதுப் பயன்பாட்டு சேவைகளை வழங்குவதும் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டு அதிகாரங்களில் ஒன்றாகும். உள்ளுராட்சி சபையின் வருமானத்திலிருந்து செலவு செய்தல்ளூ உரிய அமைச்சின்; முன்னங்கீகாரத்தைப் பெற்று விசேட வரியை அறவிடுதல்ளூ சேவைகளைப் பெறுவோரிடமிருந்து நியாயமான கட்டணங்களை அறவிடுதல்ளூ சேவைகளிலிருந்து பயன்பெறுபவர்களோடு துணை விதிகளுக்கு அமைய உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடுதல் வரி அறவிடுதல்ளூ சேவைகளை வழங்கும் ஊக்குவிப்பாளர்களுக்கு அதற்கான அனுமதி வழங்கல், சபை அங்கீகரிக்கும் கட்டணங்களை ஊக்குவிப்பாளர்கள் பெற வசதி செய்தல்.

குறிப்பிட்ட உள்ளுராட்சி சபைக்கு அண்மித்த வேறு உள்ளுராட்சி; சபையின்; அங்கீகாரத்துடன் சேவைகளை விரிவாக்க நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றோடு, பொதுச் சந்தைகளை ஒழுங்கு செய்தல், தனியார் சந்தைகளைக் கண்காணித்தல், ஆபத்து விளைவிக்கும் வியாபாரங்களைக் கட்டுப்படுத்துதல,; தனியார் சந்தைகளுக்கும், கிராம முறைச் சந்தைகளுக்கும் உரிமம் வழங்கல், அவற்றோடு அதிகாரப் பிரதேசத்திற்குக்பட்ட மக்களின் நிர்வாகத் தேவை,  கல்வி, கலாசார நடவடிக்கைகள் உட்பட சமூக, பொருளாதார விருத்திக்கான அபிவிருத்திக்கும்,; மக்கள் நலன்களுக்குமான பொறுப்புக்களையும், அதிகாரங்களையும் உள்ளுராட்சி சபைகள் கொண்டுள்ளன.

இவ்வாறு பல்வேறு அதிகாரங்களையும, பொறுப்புக்களையும் கொண்ட இச்சபைகளுக்கு கடந்த காலங்களில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட மாநகர, நகர முதல்வர்களாலும் பிரதேச சபை தவிசாளர்களாலும், உறுப்பினர்களாலும் இவ்வதிகாரங்கள் மக்களின் நலன்களுக்காகவும்; பிரதேச அபிவிருத்திக்காகவும்; எந்தளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது?

ஒரு மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளுக்;குரித்தான எல்லைகளுக்குட்பட்ட பிரதேச மக்களுக்கு இச்சபைகளினூடாக மேற்கொள்ளப்பட்ட சேவைகளில்  எந்தளவுக்கு மக்கள்; திருப்தியடைந்தனர்?.
இச்சபைகளுக்குக் கிடைக்கப்பட்ட மக்களின் வரிப்பணங்கள, நிதி மூலங்கள் முறையாக மக்களின் நலன்களுக்காக பராட்சமின்றி, பிரதேச வேறுபாடின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா? அபிவிருத்திப் புறக்கணிப்புக்களும், இன மற்றும் பிரதேச வேறுபாடுகளும் ஒவ்வொரு செயற்பாட்டிலும் இச்சபைகளின் அதிகாரத்தரப்புக்களினால் மேற்கொள்;கப்பட்டதா? இச்சபைகளின் எல்லைகளுக்குட்பட்ட பிரதேசங்களிடையே பிரதேச ஒருமைப்பாடு ஏற்படுத்தப்பட்டதா? என்ற பல வினாக்களுக்கான விடையாவேக மக்களின் தீர்ப்பு இன்று அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றன.

வாக்குரிமை உறுதி செய்தல்.
வாக்கு என்பது பேராய்தத்தை விட சக்திமிக்கது. வாக்கு எனும் அமானிதம் இலஞ்சம், ஊழல், மோசடியற்ற, சமூக அக்கறையுள்ளவர்களையும், நேர்மையானாவர்களையும், ஆளுமையுள்ளவர்களையும் தெரிவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.  

ஒவ்வொரு வாக்களாரும் எந்தவொரு கட்சியைச் சார்ந்த வேட்பாளரையும் ஆதரித்து வாக்களிப்பது அவரது அடிப்படை உரிமையாகும். அதில் தலையிடுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.  ஆனால், அளிக்கப்படும் ஒவ்வொரு புள்ளடியும் பெறுமதியுள்ளதாக அமைய வேண்டுமாயின் தெரிவு செய்யப்படும் வேட்பாளர். அறிவு, ஆற்றல், அனுபவம், செயற்றின், சமூக உணர்வு, மனித நாகரிகப் பண்புகள் கொண்டவரா என்பது குறித்து கவனத்திற்கு கொண்டு வாக்களிக்கப்படுவது அவசியமாகும்.
அந்த அவசியத்தை முறையாக உறுதி செய்து தமது வாக்கைப் பயன்படுத்தும்போதுதான் கிரமாங்கள். நகரங்கள் மற்றும் மாநகரங்களில்  மாற்றத்தைக் காண்பதோடு பிரதேச, நகர மற்றும் மாநகர சபைகளை மக்களுக்கான சேவைi வழங்கும் சபைகளாக மாற்ற முடியும்.

மாற்றம் என்பது அவசியம். நாம் மாறாமல் இருக்க முடியாது. ஆனால், அந்த மாற்றம் மக்களின் நிம்மதி சுபிட்சம், சமூக ஒற்றுமை,  புரிந்துணர்வு, அரசியல், சமூக பொருளாதார, கல்வி விருத்திக்கான மாற்றமாக அமைய வேண்டும். அவ்வாறு அமையும்போதுதான் பிரதேசங்களும், இந்;நாடும் அபிவிருத்தி காண்பதோடு, அபிவிருத்தி அடைந்த நாடுகளின் வரிசையில் இலங்கையும் இடம்பிடிக்கவும் அமைதியும,; விருத்தியும் கொண்ட நாடுகளின் பட்டியில் பெயர் பதிக்கவும் வழிவகுக்கும்.

மாற்றம் என்ற ஒரு சொல்லின் வலிமை அதற்கான முன்னெடுப்புக்கள் பல அரசாட்சிகளை ஆட்டம் காணச் செய்த வரலாறுகளும், ஆட்சி பீடம் ஏறச்செய்த வரலாறுகளும் உலகின் வல்லரசு நாடுகள் முதல் மூன்றாம் உலக நாடுகள் வரையிலான நாடுகளின் அரசியல் வரலாறுகளில் காண முடிகிறது.

இவ்வாறான இலக்குகளை அடைந்தவொரு நாட்டின் பிரஞைகள் நாம் என்ற பெறுமையை பெற வேண்டுமாயின், ஒவ்வொரு வாக்களாரும் வாக்குரிமையை பெறுமியாக்க வேண்டும். அந்த உறுதியுடன் வாக்களிக்க வேண்டும் என்பதே நீதி, நியாயம் நேர்மையை எதிர்பார்க்கும்  ஒவ்வொருவரினதும் அவாவாகும்.

341 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வாக்களர்;கள் இடும் புள்ளடிகளினூடாக வழங்கும் தீர்மானமே உள்ளுராட்சி மன்றங்களை ஆளப்போகின்றவர்களை, பிரதேசத்தின் பிரதிநிதிகளாகத்; தீர்மானிக்கப்போகிறது. வாக்காளர்களின் தீர்மானம் சரியாக இருக்குமாயின், பிரதேசங்களின் அபிவிருத்தியும், எதிர்காலமும்  சரியாக அமையும். வாக்காளர்களின் புள்ளடிகள் பிழையானவர்களைத் தெரிவு செய்யப் பயன்படுத்தப்படுமாயின் அப்புள்ளடிகளினால் எதிர்காலமும் பிழையானதாகவே அமைந்துவிடக் கூடும்.

வாக்காளாருக்கு வாக்கின்  பெறுமதி தெரிவதில்லை. ஆனால், வாக்காளர்களின் வாக்குகளைக் கோரும் வேட்பாளர்களுக்கே அவற்றின் பெறுமதி புரியும். அதனால்தான,; பல கோடி ரூபாய்கள் செலவழிந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு  ஆட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக வருவதற்கு பல பிரயத்தனங்களை கடந்த 50 நாட்களாக மேற்கொளளப்பட்டன.

கடந்த காலங்களில் வாக்கு எனும் அமானிதம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதும், அதனால் உருவாக்கப்பட்ட ஆட்சி அதிகாரங்களால் பிரதேசங்களும், மக்களும் எத்ததைகய அநுகூலங்களையும், பிரதிகூலங்களையும்; பெற்றார்கள் என்பதையும் வரலாற்றைப் பின்நகர்த்தி அவதானிக்கின்றபோது புரிந்து கொள்ள முடியும்.

ஆதலால், பிரதேசங்கள் அபிவிருத்தி காண வேண்டுமாயின் இலஞ்சம், ஊழல், மேசாடியற்ற ஆளுமையும், செயற்திறனும், மக்கள் நலன்களில் அக்கறையும், மக்களோடு இணைந்து சேவையாற்றும் மனப்பாங்கும் கொண்ட அரசியல் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவது அவசியம்.

இத்தகைய அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்ய 15.8 மில்லியன்  வாக்காளர்களும் தங்களது தீர்ப்பை மனச்சாட்சியுடன் தெரியப்படுத்த கிடைத்துள்ள சந்தர்ப்பம்தான் இன்று பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலாகும். ஊளு;ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் யார் பக்கம் என்ற தீர்ப்பின் முடிவை நாளை எதிர்பார்க்கலாம்.
வீரகேசரி 10.02.2018

Web Design by The Design Lanka