15,000 ரூபா இலஞ்சம் பெற்ற வருமான வரி அதிகாரிக்கு 14 ஆண்டு சிறை » Sri Lanka Muslim

15,000 ரூபா இலஞ்சம் பெற்ற வருமான வரி அதிகாரிக்கு 14 ஆண்டு சிறை

courts

Contributors
author image

Editorial Team

இலஞ்சம் பெற்ற முன்னாள் உள்நாட்டு இறைவரி அதிகாரி ஒருவருக்கு 14 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டில் 15,000 ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றத்திற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 9000 ரூபா அபராதமும், 15,000 ரூபா தண்டப் பணமும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அநுராதபுரம் கிளையில் வரி மதிப்பீட்டாளராக பணியாற்றும் டீ.எம். ஜனக பண்டார என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வரி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் உதவி வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 15,000 ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்டதற்காக அவர் குற்றவாளியாக இனம்காணப்பட்டுள்ளார்.

Web Design by The Design Lanka