173 ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழப்பு! » Sri Lanka Muslim

173 ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழப்பு!

cri

Contributors
author image

Editorial Team

பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில், 173 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்களையும் இழந்தது இலங்கை.

ஐக்கிய அரபு இராச்சியத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, நான்காவது ஒரு நாள் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது.

ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட நிலையில், எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலேனும் வெற்றிபெற்று ஆறுதல் பெற எண்ணியிருந்த இலங்கை அணியை, பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்கள் திணறடித்தனர்.

அவர்களது துல்லியமான பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாத இலங்கை அணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்குத் தமது விக்கட்களைப் பறிகொடுத்தனர்.

மூன்றாவது போட்டியில் ஓட்டங்களைக் குவித்த தலைவரும் ஆரம்ப வீரருமான உபுல் தரங்க, இம்முறை ஓட்டம் எதுவும் பெறாமலேயே ஏமாற்றினார்.

ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி சார்பாக அறிமுக வீரராகக் களமிறங்கிய சதீர சமரவிக்கிரம ஓட்டம் எதுவும் பெறாமலேயே ‘க்ளீன் போல்ட்’ முறையில் ஆட்டமிழந்தார்.

இலங்கை சார்பில் லஹிரு திரிமான்னே மட்டும் 62 ஓட்டங்களைப் பெற, ஏனைய வீரர்கள் வந்த விரைவிலேயே ஓய்வறைக்கு நடையைக் கட்டினர்.

174 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி தற்போது களமிறங்குகிறது.

Web Design by The Design Lanka