18 அநாதைச் சிறுமிகளின் பாலியல் துஷ்பிரயோக வழக்கு - நீதிமன்றத்தில் இன்று நடந்தவை » Sri Lanka Muslim

18 அநாதைச் சிறுமிகளின் பாலியல் துஷ்பிரயோக வழக்கு – நீதிமன்றத்தில் இன்று நடந்தவை

courts

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தாருன் நுஸ்ரா அநாதைச் சிறுமிகளின் பாலியல் துஷ்பிரயோக வழக்கு இன்று நுகேகொட நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது.
எனது சட்டத்தரணிச் சகோதரர் ஒருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

நீதி மன்றத்திற்கு முன்னால் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பலர் கலந்து கொண்டார்கள்.இம்முறை பல ஊடகங்கள் வந்திருந்தன. சட்டத்தரணி சிராஸ் நூர்டீன் ஆஜராகி இருந்தார்.

பொலிஸார் வழமைபோல விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றனர். 12 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கான மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது. குழந்தைகள் ஆடைமாற்றும் இடங்களில் வைக்கப்பட்ட CCTV கெமெராக்கள் மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு
ஏலவே அனுப்பப்பட்டிருக்கிறது.

திடீரென்று ஒரு பெண்மணி நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகளுடன் வந்திருக்கிறார்.தான் தாருன்னுஸ்ராவில் சில காலங்களுக்கு முன்னர் ஆசிரியையாகக் கடமையாற்றியதாகவும் தனக்கு அங்கு நடந்தவைகள் தெரியும் எனவும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்கு மூலம் கொடுக்கப்போனபோது பொலீசார் அதனை ஏற்கவில்லை என்றும் நீதிபதியிடம் கூறினார். உடனே நீதிபதி அந்தப் பெண்பணியின் வாக்கு மூலத்தை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.பொலீஸார் வாங்கப்பட்டிருக்கலாம்.

வழக்கு எதிர்வரும் ஜனவரி 25ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.

இரண்டு விடயங்கள் என்னை உறுத்துகின்றன.

ஒன்று இவை அனைத்தும் மரீனா ரிபாயின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் நிறுவனம்.மிகவும் சாதூர்யாமாக அவர் தப்பித்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு எதிராக யாரும் முறைப்பாடு செய்யவில்லை. அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

இரண்டாவது, சமூகத்தின் கவனத்தை ஈர்க்காத வரைக்கும் இந்த வழக்கு முடிவதற்கு நீண்ட காலமெடுக்கும். சாதாரணமாக இந்த வழக்கு 7 வருடங்களுக்கு அதிகமான தண்டனை சம்பந்தமானது என்பதனால் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுவிடும். இந்த வழக்கு முடியும் போது அந்தக் குழந்தைகள் திருமணமாகிவிடுவார்கள்.

அதற்கு ஒரு வழி இருக்கிறது.சமூகத்தின் ஒரு சர்ச்சையான வழக்கை சமூக அழுத்தங்களின் காரணமாக Trial at Bar வழக்காக நடத்துவதற்கு பிரதம நீதியரசருக்கு சட்டமா அதிபர் வேண்டுகோள் விடுக்கலாம்.அவ்வாறு நடந்தால் விசாரணைகள், தீர்ப்பு எல்லாம் ஒரு மாத காலத்திற்குள் நடந்து முடிந்துவிடும்.வித்யா கொலை வழக்கும் சமூகத்தின் அவதானத்தை ஈர்த்தனால்தான் trial aட் bar வழக்காக விரைவாக நடத்தி முடிக்கப்பட்டது.

ஆனால் எமது சமூகத்தில் பெரும்பாலானவர்களுக்கு இதில் அக்கறை இல்லை. விடயங்களைப் பத்திரிகைகளில் பிரசுரிக்கக் கூடாது என்று இலங்கையில் பிரபலமாக ஒரு முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பத்திரிகைகளுச் சொல்லியிருக்கிறார். ஜம்மியதுல் உலமா,சூரா சபை அமைதி காக்கிறது. தமிழ் பத்திரிகைகள் அமைதி காக்கின்றன.

இந்த வழக்கின் பாரதூரம் எம்மவர்களுக்குப் புரிந்தது குறைவு.பாலியல் துஷ்பிரயோகம் என்பதே பாரிய குற்றம். அதிலும் அநாதைகளின் பாலியல் துஷ்பிரயோகம் என்பது அதை விடப் பயங்கரமானது. அதிலும் 12 வயதுக்குட்பட்ட அநாதைகள் என்றால் இதை விட ஒரு கேவலமான நிலை இருக்க முடியாது.

இது சமூகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும். முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் முன்வர வேண்டும். ஜும்மாக்களின் பேசப்பட வேண்டும். ஜும்மாக்களின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட வேண்டும். வித்தியா கொலை வழக்குப் போல் இது சமூகத்தின் கவனத்தை ஈர்க்குமிடத்து வழக்குத் தீர்ப்பு துரிதமாகும்.

அதே நேரம் தன்னை ஆன்மீக வாதி என்று சொல்லிக் கொண்டு ஆன்மீக முகமூடிக்குள் தங்களை ஒழித்துக் கொண்டு இப்படியான அநீதிகளை இழைப்பவர்கள் இனங்காட்டப்பட வேண்டும்.

அனாதைகள் விடயத்தில் மிகவும் கவனயீனமாக இருந்த மரீனா ரிபாயவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டும்.

இன்ஷா அல்லாஹ் தண்டிக்கப்படுவார்.

Web Design by The Design Lanka