18 வயது பெண்கள் நினைத்தால் இது ஒரு தரமான சம்பவம், சிந்தியுங்கள்..! - Sri Lanka Muslim

18 வயது பெண்கள் நினைத்தால் இது ஒரு தரமான சம்பவம், சிந்தியுங்கள்..!

Contributors

“ஹாஜரா தாத்தா”
பெண் பிள்ளை ஒன்று இருப்பதால் விவாகரத்தின் பின் அவளை மறுமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டிய ஆண் சமூகத்தால், வாழ்க்கை கேள்விக் குறியான பல பேரில் இவளும் ஒருத்தி,

வாழ்க்கையை எதிர்பார்த்து
அது கிடைக்கவே கிடைக்காது என்றாகிப் போனதால் தன் வாழ்வாதாரத்திற்காக வீடு வீடாக வேலை செய்வதால் அந்த ஊரில் அனைவரும் அறிந்த ஒரு ஏழை விதவைத் தாய்.

இப்போது அவளது மகளுக்கு வயது 15,
அன்றும் இப்போழுதும் குறுக்கு வழியில் ஹாஜராவை அடைந்து கொள்ள வலை விரித்த சில ஈனப்பிறவிகள் கண்களில் 15 வயதுப் பெண்ணும் படாமல் இருப்பாளா என்ன!

தன்னைப் போல் தன் மகளையும்
பாதுகாத்துக் கொள்ள அவள் நம்பிப் பழகும் மிஷ்ராவின் வீட்டில் மகளை விட்டு விட்டே வேலைகளுக்கு செல்வாள் ஹாஜரா.மிஷ்ரா ஹாஜராவை விட மூன்று வருடங்கள் மூத்தவள்.

சில நாட்களாக முட்டங்காளில்
எதோ ஒரு வலி என்று கூறிக் கொண்டிருந்த ஹாஜராவால் அன்று திடீரென நடக்க முடியாமல் செல்லவே, கையில் இருப்பதை எடுத்துக் கொண்டு அரச வைத்தியசாலைக்கு சென்றபோது,

சில பரிசோதனைகளை செய்துவிட்டு
MRI Scan ஸ்கேன் ஒன்று செய்ய வேண்டும். அதற்கு ஆகக் குறைந்தது 6 மாதங்கள் சரி ஆகும் என்று கூறி சில மருந்துகளோடு வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர்.

ஒரு மாதமளவு கடந்த போது
அவருக்கு கால் வலி அதிகமாகவே தனியார் வைத்தியர் ஒருவருடம் கஷ்ட்டப்பட்டு சென்றபோது, அவர்களும் MRI,CT என்று சில ஸ்கேன்களை எழுதி அவசரமாக அதனை எடுக்கும்படி கூறி இருந்தனர்.

அதற்கான விலை
கிட்டத்தட்ட 40,000 இனையும் விட அதிகமாக இருந்ததைப் போலவே ஹாஜராவால் அதனை நினைத்தும் பார்க்க முடியாது என்பதை நான் கூறித் தான் நீங்கள் புரிய வேண்டியதில்லை அல்லவா.

தன் தாயின் நிலையைக் கூறி
மிஷ்ராவிடம் அழுது புலம்பினால் ஹாஜராவின் மகள். உயர் தரம் படித்துக் கொண்டிருக்கும் மிஷ்ராவும் சாதரண குடும்பத்துப் பெண் தான்.

என்றாலும்
தன்னோடு இருக்கும், தன் வீட்டை நம்பி இருக்கும் அந்த சின்னவளின் கண்ணீர் இந்த சின்னவளை ஏதோ செய்தது. எப்படியும் இவளுக்கு உதவியாக வேண்டும் என ஒரு ஆசை மனதில் எழவே,அவளது மனதிற்கு ஒரு ஆலோசனை தோன்றியது.

உடனடியாக
தான் கல்வி கற்கும வாட்ஸப் குரூப்பில் இந்த விடயம் சம்பந்தமாக ஒரு மெசேஜ் இனை வைத்தாள்.அதில் இருக்கும் (பெண் பிள்ளைகள் மாத்திரம் ) தம்மால் முடிந்த தொகையை உதவ முன் வந்தாலும் அது இந்த தேவைக்கு போதுமானதாக இருக்கவில்லை.

அடுத்த கட்டமாக
உயர் தரத்தில் கலைப்பிரிவில் படிக்கும் ஒரு தோழியை தொடர்பு கொண்டு விபரத்தைக் குறிப்பிட்டு அவர்கள் தோழிகளிடமும் உதவி கேட்க,

அவர்களும் இவர்களும் ஒன்று சேர்ந்து
சிலரின் பெற்றோர், அயலவர்களிடம் இருந்துமாக பத்து நாட்களுக்குள் 53500// ரூ.பாயை சேர்த்து ஹாஜரா தாத்தாவை ஸ்கேன் செய்து, மருந்தும் எடுத்துக் கொடுக்க உதவி செய்து முடித்து இருந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்
இன்று ஹாஜரா தாத்தா தன் கால் வலி நீங்கி மருந்துகளுடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதே போல்
உதவி செய்த நல்ல உள்ளங்களில் ஒருவர் ஹாஜராவின் மகளின் கல்வி செலவுகள் அனைத்தையும் பொறுப்பில் எடுத்து அவளின் பாரத்தை கொஞ்சம் குறைத்தும் இருந்தனர்.

வெகு விரைவில்
வீட்டில் இருந்தபடியே ஹஜரா தாத்தாவிற்கு ஒரு தொழில் செய்து கொள்ளவும் அவர்களின் தகப்பன்களின் ஒருவர் வாக்கும் கொடுத்து இருப்பது மேலதிக தகவல்.

18 வயதுப் பெண் நினைத்தால்
கண்ட கண்ட கேவலங்களை சமூகவலை தளத்தில் செய்து சீரழியலாம்.
அந்த அசிங்கங்களை விட இப்படியான ஆக்கபூர்வமான விடயங்களை இவர்களை விட இளையவர்களும், வயதில் மூத்தவர்களும் கூட செய்து சாதிக்கலாம் என்பதற்காகவே இந்த விடயம் இங்கே பதிவாகிறது.

சகோதரிகளே நீங்களும் சிந்தியுங்கள்.
எதிர்வரும் ரமழான் மாதத்தில் இப்படியான ஒருவரையேனும் இனம் கண்டு உதவிட திட்டங்களை வழி வகுத்திடுங்கள்.

சகோதரர்களே
சிகரட், சாராயம், போதை, பொம்புல, அடிதடி, அடிமைப் படுத்தல் என்று கேவலமாக கெத்து காட்டுவதல்ல வாழ்க்கை. அதுவல்ல கெத்து,

எதோ எம்மால் முடிந்தவரை
ஒருவரை சந்தோஷமாக வைக்க முயற்சி செய்ய வேண்டும். அது தான் கெத்து .

Web Design by Srilanka Muslims Web Team