மலையகத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சந்திப்பு - Sri Lanka Muslim

மலையகத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சந்திப்பு

Contributors

27ம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டி ஜின்னா கேட்போர் கூடத்தில் கலாநிதி அனஸ் அவர்களின்  தலைமையில் மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.

கண்டி வரலாற்றில் மிக அதிகமான முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட சந்திப்பாக இது கருதப்படுகின்றது. கண்டியை மையமாகக் கொண்டு ஊடக அமைப்பொன்றைத் தோற்றுவிப்பது தொடர்பாக நடந்த இந்தக் கலந்துறையாடலில் மலையகத்தில் பல பிரதேசங்களைச் சேர்ந்த பெரும் தொகையான ஊடகவியலாளர்கள் இதற்கு  வருகை தந்திருந்தனர்.

மலையக முஸ்லிம் சமூக மற்றும் ஊடகவியலாளர்கள் நலன்கள் கருதி இவ்வாறன அமைப்பொன்று தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று இந்தக் கண்டி ஊடகவியலாளர் சந்திப்பில் ஏகமனதாகத் தீர்மானிக்கபட்டது. அத்துடன் இந்த அமைப்பிற்கு சூட்ட வேண்டிய நாமம் தொடர்பாகவும் பல சிபார்சுகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த அமைப்புத் தொடர்பான ஏற்படுகளை வடிவமைப்பதற்காக 21 பேரைக் கொண்ட இடைக்கால நிருவாக சபையொன்றும் இங்கு தெரிவு செய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட இந்த இடைக்கால சபையின் தலைவராக இர்பான் காதரும் உதவித் தலைவராக எம்.ரம்ஸின் அவர்களும் இணைச் செயலாளர்களாக ஏ.ஆர்.ஏ.பரீல் மற்றும் எல்.ஏ.யூ.எல்.எம்.நளீர். அவர்களும், பொருளாலராக எஸ்.எச்.எம்.சியாம் அவர்களும் அழைப்பாளியாக ஏ.ஜீ.எம்.நஜீப் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த இடைக்கால சபை மூன்று மாதங்களுக்குள் அமைப்பை உத்தியோகபூர்வமாகத் தோற்றுவிப்பதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்ற பணிகளை மேற்கொள்வதுடன் குறிப்பாக 2014 ஜனவரி மாதம் நடை பெறுகின்ற  நிருவாகிகளைத் தெரிவு செய்கின்ற தேர்தலுக்கு முன்னர் தற்போதுள்ள பொதுச்  சபைக்கு அமைப்பிற்குத் தேவையான யாப்பை வடிவமைத்து அதற்கான அங்கிகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. என்று நளீர் அவர்கள் எமக்குத் தெரிவிக்கின்றார்.

Web Design by Srilanka Muslims Web Team