19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம்..! - Sri Lanka Muslim

19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம்..!

Contributors

நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான சாத்தியமிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் நாளை மதியம் 12.00 மணி வரை இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனர்த்த பேரிடர் முன்கூட்டிய எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மி.மீற்றருக்கு மேல் கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team