பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான Tharapuram Education Center கல்வி நிலையம் - புதிய மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரல்! - Sri Lanka Muslim

பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான Tharapuram Education Center கல்வி நிலையம் – புதிய மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரல்!

Contributors
author image

T.K.Rahumathulla

தாராபுரம் துருக்கி சிட்டியில் அமைந்துள்ள Tharapuram Education Center கல்வி நிலையத்தில், 2023 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அந்தவகையில், 06 – 16 வயதிற்குட்பட்ட, தந்தையை இழந்த மாணவர்கள் இங்கு தங்கி, அவர்களுக்கு தேவையான கல்வி, மார்க்க விடயங்களுடன், குர்ஆனை மனனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம்.

இங்கு அங்கீகரிக்கப்பட்ட அரச பாடசாலையில் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, ஆங்கிலம் மற்றும் கணனி ஆகியவற்றை விசேடமாக கற்பதற்கும் இங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, இங்கு கற்க விரும்பும் மாணவர்கள் தங்களது பெயர் விபரங்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கோரப்படுகின்றீர்கள்.

இணைப்பாளர்,

தாராபுரம் கல்வி நிலையம்

துருக்கி சிட்டி, தாராபுரம்,

மன்னார்.

Web Design by Srilanka Muslims Web Team