193 புள்ளிகளுடன் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்ற இபாஸில்! » Sri Lanka Muslim

193 புள்ளிகளுடன் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்ற இபாஸில்!

1376874_665842823435161_1757996356_ndgg

Contributors

(Faseel Ur Rahman)

இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் தோற்றிய பேருவளை சீனன்கோட்டை கண்கானம்கொடை வீதியை சேர்ந்த முஹம்மது இபாஸில் 1 9 3 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்றுள்ளதுடன் களுத்துறை மாவட்டத்தில் 3 ஆம் இடத்தையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

முஹம்மது இப்திகார் ஹாஷிம், பாஸ்மியா ஷெரீன் தம்பதியினரின் ஏக புதல்வரான இவர் பேருவளை ஆரியவன்ச (சிங்கள) மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகிறார். அல்லாஹ்வின் அருளினாலும் தமது மகனின் கல்வித் திறமையினாலுமே இவ்வாறானதொரு சிறந்த பெறுபேறை பெற முடிந்ததாக இபாஸிலின் பெற்றோர் குரிப்பிடிகின்றனர்.

தனது மகன் பரீட்சையை சிறப்பாக எதிர்கொள்வதட்காக சகல வழிகாட்டல்களையும் தான் வழங்கியதாகவும் பரீட்சை நெருங்கிய தினங்களில் அவர் தினமும் அதிகாலையில் எழுந்து தஹஜ்ஜத், பஜ்ர் (சுபாஹ்) தொழுகைகளை நிறைவேற்றிய பின்னர் பாடசாலை செல்லும் வரை கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் இபாஸிலின் தாயார் பஸ்மியா ஷெரீன் குறிப்பிடுகிறார். அதேபோன்று, தனது மகன் எப்போதும் படிப்பில் ஆர்வமுடையவராக காணப்பட்டதாக இபாஸிலின் தந்தை முஹம்மது இப்திகார் குறிப்பிடுகிறார்.

“பாடசாலை அதிபர் அமர சரோஜினியும் வகுப்பாசிரியை எஸ். கே. பீ. கே. சில்வாவும் இபாஸில் இந்தப் பெறுபேற்றினை பெற காரணமாக இருந்தவர்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். இபாஸிலின் திறமையில் எமக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை, அமைதியான சுபாவமுடைய அவர் எமது பாடசாலையில் நிறையவே திறமைகள் கொண்டவராக விலங்குகிறார் என வகுப்பாசிரியை எஸ். கே. பீ. கே. சில்வா குறிப்பிடுகிறார். சிறந்ததொரு வைத்தியராக வந்து சமூகத்துக்கு பணியாற்றுவதே தனது எதிர்கால இலட்சியம் என்று இபாஸில் குறிப்பிடிகிறார்.

Web Design by The Design Lanka