2 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த வெற்றி - Sri Lanka Muslim
Contributors

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், ரோஜர் பெடரரை வீழ்த்தி அவுஸ்திரேலியாவின் லேடன் ஹெவிட் சாம்பியன் பட்டம் வென்றார்.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அவுஸ்திரேலியாவின் லேடன் ஹெவிட் மோதினர்.

பெடரரை 6-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து ஹெவிட் சாம்பியன் பட்டம் வென்றார்.

2010ம் ஆண்டுக்கு பிறகு ஹெவிட் பெறும் முதல் ஏடிபி பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team