20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரிய அதிகாரி » Sri Lanka Muslim

20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரிய அதிகாரி

_101817965_gettyimages-78469727

Contributors
author image

BBC

வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன்னின் முக்கிய உதவியாளரான ஜெனரல் கிம் யாங்-சோல், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் இடையே நிகழ திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பு குறித்து விவாதிக்க அமெரிக்கா சென்றுள்ளார்.

North Koreaபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஜெனரல் கிம் யாங்-சோல்

அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோவை அவர் சந்தித்துப் பேசினார். வடகொரியாவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்கா வருவது சுமார் 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

ஜூன் 12 அன்று சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்பில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்று டிரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார்.

எனினும், திட்டமிடப்பட்டபடி அந்த சந்திப்பு நடைபெறுவதற்காக இரு தரப்பினரும் மீண்டும் புதிதாக முயற்சி செய்து வருகின்றனர்.

நியூயார்க்கில் ஐ.நா தலைமையகம் அருகே, புதன்கிழமை மாலை நடைபெற்ற அந்த சந்திப்புக்கு பாம்பேயோ மற்றும் ஜெனரல் கிம் ஆகியோர் தனித்தனியாக வந்தனர்.

சந்திப்புக்கு பின் பேசிய பாம்பேயோ, அமெரிக்க மாட்டிறைச்சியுடன் அந்த இரவு விருந்து சிறப்பாக இருந்ததாகத் தெரிவித்தார்.

லிபியாவின் அணு ஆயுத ஒழிப்புடன் வடகொரியாவை ஒப்பிட்டு பேசியதற்கு முன்னர் வடகொரியா கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

லிபியாவின் முன்னாள் அதிபர் கர்னல் கடாஃபி, அணு ஆயுத திட்டத்தைக் கைவிட்டபின், மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்த கிளர்ச்சியாளர்களால் சில ஆண்டுகளிலேயே கொல்லப்பட்டார்.

அடுத்தது என்ன?

வட கொரியாவின் இணை வெளியுறவு அமைச்சர் சோ சன்-ஹுய், தென்கொரியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் சங் கிம் உடன், இரு கொரிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள பன்முஞ்சோம் கிராமத்தில் தொடர்ந்து சந்திக்கவுள்ளார்.

North Korea USபடத்தின் காப்புரிமைREUTERS
Image captionபாம்பேயோவை சந்திக்க வரும் ஜெனெரல் கிம் யாங்-சோல்

இந்த சந்திப்பு கடந்த ஞாயிறு முதல் இடைவெளிகளுடன் நடைபெற்று வருகிறது.

அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்தைகளின்போது அவர்கள் இருவரும் ஏற்கனவே சந்தித்துள்ளனர்.

சிங்கப்பூரில், ஜோ ஹாகிங் தலைமையிலான அமெரிக்க குழு, வடகொரியா அதிபரின் செயல்முறை தலைமை அரசு நிர்வாகியான கிம் சாங்-சன் உடன் சந்தித்து பயண ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கவுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், பேச்சுவார்த்தை நடத்த வியாழனன்று வடகொரியத் தலைநகர் பியாங்யாங் வருகிறார்.

வெள்ளியன்று பாம்பேயோவுடன் முதல் முறையாக அவர் தொலைபேசியில் உரையாடினார்.

அமெரிக்க மற்றும் வடகொரியத் தலைவர்கள் சந்திக்க திட்டத்துடனேயே இன்னும் இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சேண்டர்ஸ் கூறியுள்ளார்.

Web Design by The Design Lanka