20 ஆவது திருத்த சட்டமூல விவகாரம்: ஆதரித்து வாக்களித்த மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் மீதும் அடுத்த இரு வாரத்தில் விசாரணை..! - Sri Lanka Muslim

20 ஆவது திருத்த சட்டமூல விவகாரம்: ஆதரித்து வாக்களித்த மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் மீதும் அடுத்த இரு வாரத்தில் விசாரணை..!

Contributors

(எம்.எப்.எம்.பஸீர்)

20 ஆவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படவுள்ளது.
கட்சியின் அரசியல் உயர் பீடம் நியமித்த, சிரேஷ்ட பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரனணி என்.எம். சஹீட்டின் தலைமையிலான மூவர் கொண்ட ஒழுக்காற்றுக் குழு அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்கலையும் அழைத்து விசாரிக்க தீர்மானித்துள்ளது.

வெள்ளவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலானர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,’ துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த புத்தளம், அநுராதபுரம் மாவட்டங்களை பிரதி நிதித்துவம் செய்யும் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருமே, முன்னர் 20 ஆவது திருத்த சட்ட மூலத்துக்கும் கட்சி நிலைப்பாட்டை மீறி ஆதரவளித்தனர்.

அப்போது அவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படவில்லை. மாற்றமாக கட்சி உயர் பீடம் ஒழுக்காற்று குழுவொன்றை நியமித்தது. அதன் தலைவராக நானே நியமிக்கப்பட்டேன். இதனையடுத்து, 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரளித்தமை தொடர்பில், தமது பக்க நியாயங்களை எழுத்துமூலம் குறித்த இரு எம்பிக்களிடமும் ஒழுக்காற்று குழு வினவியது.

இதனையடுத்து அவ்விருவரும் அந்த விளக்கத்தை அளிக்க 5 மாதங்கள் கால அவகாசம் கோரினர். அதற்கும் நாம் ஜனநாயக ரீதியில் பரிசீலித்து அனுமதியளித்தோம். இவ்வாறான நிலையில் எமது இறுதி அறிவித்தல் பிரகாரம் அவர்கள் தமது பக்க விளக்கங்களை எழுத்து மூலம் தற்போது அனுப்பியுள்ளனர் என்றார்.

Source : Metro News

Web Design by Srilanka Muslims Web Team