20 ம் திகதி அனைத்துகட்சிகளும் இணைந்து வாக்கு பெட்டிகளை பாதுகாக்க வேண்டும்:- ஹரின் பெர்ணாண்டோ - Sri Lanka Muslim

20 ம் திகதி அனைத்துகட்சிகளும் இணைந்து வாக்கு பெட்டிகளை பாதுகாக்க வேண்டும்:- ஹரின் பெர்ணாண்டோ

Contributors
author image

Editorial Team

ஊவா மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக ஜே.வி.பியுடன் இணைந்து செயற்பட தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான வேட்பாளர் ஹரின்பெர்ணாண்டோ  தெரிவித்துள்ளார்.

 

எதிர்காலத்தில் தேவைப்பட்டால் முதலமைச்சர் பதவியை கூட எதிர்;க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக துறக்க தயார்,

 

ஆளும்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சசீந்திர ராஜபக்ச ஊவாமக்களின் தேவைகளை ப+ர்த்தி செய்ய தவறிவிட்டார், சிறிய விடயங்களை கூட சரிசெய்ய தவறிவிட்டார்.

 

அவர் சிறிய விடயங்களில் ஆரம்பித்திருக்கவேண்டும்- உதாரணத்திற்க்கு சிறுவர்களுக்கு சிறியளவு பாலை வழங்குவது- அதனால் மக்களுக்கு பலன் கிடைத்திருக்கும்

 

நாட்டின் உல்லாச பயணத்துறைக்கு ஊவா மாகாணம் ஆற்றியிருக்க கூடிய பங்களிப்பை அரசாங்கம் கணக்கிலெடுக்கவில்லை.

 

ஐக்கிய தேசிய கட்சிக்கும்.ஜேவிபிக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்தாலும் கூட இரு கட்சிகளும் பொதுவான இலக்கை நோக்கி செயற்படுகின்றன,இது குறித்து பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
 

20 ம் திகதி அனைத்துகட்சிகளும் இணைந்து வாக்கு பெட்டிகளை பாதுகாக்க வேண்டும்:-

 

ஊவா தேர்தல் வாக்களிப்பு தினமான 20 ம் திகதி அனைத்துகட்சிகளும் இணைந்து வாக்கு பெட்டிகளை பாதுகாக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர்வேட்பாளர் ஹரின் பெர்ணாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

பதுளையில் செய்தியாளர்களுடன் உரையாடுகையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
நாங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலின் இடையில் நிற்கிறோம், இவ்வளவு கடினமான போட்டி நிலவும் என அரசாங்கம் நினைத்துப் பார்க்கவில்லை. முடிவுகள் வெளியாகும் வரை வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பது எதிர்க்கட்சிகளின் கடமையாகும்.

 

இறுதி வாக்கு எண்ணப்படும் வரை ஜே.விபியும் ஜனநாயகட்சியும் இணைந்து நிற்க்கவேண்டும் ,தற்போது மக்கள் ஆதரவு ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் திரும்ப தொடங்கியுள்ளது, குறிப்பாக பதுளையில் எமக்காக ஆதரவு அதிகரித்துள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team