2012-2015 பகுதியில் சஹ்ரானுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதை கெஹேலிய பகிரங்கமாக கூறினார்..! - Sri Lanka Muslim

2012-2015 பகுதியில் சஹ்ரானுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதை கெஹேலிய பகிரங்கமாக கூறினார்..!

Contributors
author image

Editorial Team

இன்று(17) எதிரக் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்துக்கள்.

வெளி நாட்டு வேலைவாய்ப்பு கருதி கொரோனா நிலைமைகள் காரணமாக மீள நாட்டிற்கு வர முடியாமல் இருக்கும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக எதிர் வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் வெளி நாட்டில் தொழில் புரியும் சகல குடும்ப அங்கத்தவர்களையும் கட்சி பேதமின்றி கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.ஆட்சிக்கு வர இவர்களுடமிருந்து வாக்குகளைப் பெற்ற இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிலும் முழு உலகும் கொரோனா சிக்கலுக்கு முகம் கொடுத்து பாரிய சவால்களை சந்தித்து வரும் ஓர் இக்கட்டான நிலையில் நமது நாட்டுப் பிரஜைகளான அவர்கள் குறித்து அரசாங்கம் கவனிக்காமை மனிதாபிமானமற்ற செயலாகும்.

ஈஸ்டர் தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை மக்களிடமிருந்து தூரமாக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. அவதானங்களை திசை திருப்ப இன்று புர்கா தடையைப் முன்னிலைப்படுத்தி இனவாத கருத்துக்களை தூன்டிவிடுகின்றனர்.

2012-2015 காலப்பகுதியில் சஹ்ரானுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதை நானும் முஜிபுர் ரஹ்மானும் கலந்து கொண்ட ஹிரு தொலைக்காட்சியில் கெஹேலிய ரம்புக்வெல்ல பகிரங்கமாக ஆடம்பரமாக தெரிவித்தார்.அது மாத்திரமல்லாமல் பெட்டு அம்மானுக்கும் சம்பளம்  வழங்கியதாக கூறினார்.சஹ்ரானை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட நாலக சில்வா திட்டமிட்டு நாமல் குமாரவின் கருத்தை வைத்து கைது செய்யப்பட்டார். நாலக சில்வாவிற்கு பயந்து சஹ்ரான் வெளிநாட்டில் இருந்ததாகவும் நாலக சில்வா 2018 ஒக்டோபர் மாதம் கைது செய்யப்படடதும் மீள நாட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.நாலக சில்வா பல பதக்கங்கள் வென்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி. சரத் பொனசேகா,கோட்டாபய ராஜபக்‌ஷ போன்றோரை காப்பாற்றியவர்.

நாலக சில்வாவை கைது செய்தது மஹிந்த,மைத்திரி மற்றும் கோட்டாபய கூட்டாகும். இந்த தாக்குதலுக்கான ஒரு அங்கத்தை மைத்திரி அவருக்ககே தெரியாமல் நிறைவேற்றியுள்ளார்.

நாமல் குமார கூறிய ஜனாதிபதி தாக்குதல் விசாரணை இன்று எங்கே என்று கோள்வி எழுப்பினார்.சுரேஷ் அல்விஸ் குறித்து அறிக்கையில் தகவல்கள் இல்லை.மலேசிய தூதரகத்தில் பாதுகாப்பு துறை சார்ந்த பிரதானியாக செயற்பட்ட வேலை இவரும் சஹ்ரானும் தெடர்பு பட்டனர்.இந்த தகவல்கள் அறிக்கையில் இல்லை.சஹ்ரானின் மனைவி வழங்கிய இரகசிய வாக்குமூலம் அறிக்கையிலும் இல்லை,பகிரங்கப்படுத்தவும் இல்லை.இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக சுரேஷ் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனி வரி இலாப மேசடியில் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.1.5 பில்லியன் இலாபத்தை சூரையாடியுள்ளனர்.நெலும் குலுனவிற்கு 19.8 பில்லியனே முடிந்தது.இன்று சதோசவிலும் சீனி 85 ரூபா விற்பனை விலைக்கு இல்லை.நல்லாட்சியில் வரிக் குறைப்புச் செய்தோம்.அதன் பிரதிபலனை மக்கள் கண்டு கொண்டனர்.

சுற்றாடல் மாசுக்கெதிராக தொலைக்காட்சியில் கதைத்த ஒரு பிள்ளையின் வீட்டிற்கு மறு நாளே பொலிஸார் சென்று வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.அடுத்த தினம் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று வினவியுள்ளனர். இது அரசாங்கத்தின் மிகவும் கீழ் தரமான செயலாகும்.கருத்துச் சுதந்திரத்திற்கு பாரிய சவாலாகும்.சுற்றாடல்வாதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் புரேமதாச தலைமையில் இதற்கு எதிராகப் போராடுவோம் எனத் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team